fbpx

பங்குனி உத்திரம்..!! நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஏப்ரல் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பங்குனி உத்திர திருநாள் 11.04.2025 வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் பொதுத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் 11ஆம் தேதி பொதுத்தேர்வுகள் இருந்தால், பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த உள்ளுர் விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத்தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும். மேலும், இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது.

உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (26.04.2025) 4-வது சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்படுகிறது. அதே சமயம், கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ – மாணவியருக்கு இவ்வேலை நாள் பொருந்தாது” என்று அறிவித்துள்ளார்.

Read More : தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு பிரச்சனையை கையிலெடுக்கும் திமுக..!! எதுக்கு இந்த கபட நாடகம்..? அண்ணாமலை சரமாரி தாக்கு..!!

English Summary

The District Collector has declared a local holiday for Tirunelveli district on April 11th.

Chella

Next Post

வக்பு வாரிய மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானதா..? எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்? - முழு விவரம் உள்ளே

Wed Apr 2 , 2025
What is Waqf (Amendment) Bill? All You Need To Know About The Controversy

You May Like