fbpx

பங்குனி உத்திரம்!… ஏப்.5ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!… ஆட்சியர் அறிவிப்பு!

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏப்ரல் 5-ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்

பங்குனி உத்திரம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது முருகனுக்குரிய விரத நாள் என்பது தான். தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேரும் நாள்தான் பங்குனி உத்திரம். அனைத்து மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு. ஆனால் இந்த பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. இந்த நன்னாளில் பக்தர்கள் முருகனுக்கு தேர் இழுத்தும், அபிஷேகம் செய்தும் அவர்களது வேண்டுதலின் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திர திருநாள் வரும் ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேன் அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளார். இந்த விடுமுறை பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Kokila

Next Post

மத்திய அரசு, பெண்களின் வங்கி கணக்கில் ரூ.9,000 செலுத்த உள்ளதா..? தீயாக பரவும் செய்தி.. உண்மை என்ன..?

Wed Mar 22 , 2023
மத்திய அரசு சார்பில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 பணம் செலுத்தப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.. மக்கள் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் பணம், கடன், மானியம் உள்ளிட்ட பிற உதவிகளை வழங்கும் அரசாங்கத் திட்டங்களைப் பற்றிய போலிச் செய்திகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது இந்திய அரசாங்கத்தின் புதிய முன்முயற்சி என்று கூறப்படும் […]

You May Like