fbpx

பாரா ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் போட்டி..!! தங்கம் வென்று அசத்தினார் இந்திய வீரர் நித்தேஷ் குமார்..!!

பராலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் நித்தேஷ் குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

பாராலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் போட்டியின் SL3 பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நிதேஷ் குமார், கிரேட் பிரிட்டனை சேர்ந்த டேனியல் பெத்தல் என்பவரை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய நிதேஷ், தொடக்க செட்டை 21-க்கு 14 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தல் கடும் சவால் கொடுத்தார். கடுமையான போட்டிக்கு மத்தியில் நிதேஷ் குமாரால் இரண்டாவது செட்டில் புள்ளிகளை குவிக்க முடியவில்லை. இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட் யாருக்கு என கடுமை போட்டி நிலவியது. இரண்டு வீரர்களும் தோல்வியை எளிதில் எடுத்துக் கொள்ள தயாராக இல்லை.

இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்திய வீரருக்கு ஈடுகொடுத்து பிரிட்டன் வீரர் விளையாடினார். இதனால் போட்டி டை பிரேக்கருக்கு சென்றது. முதலில் பின்தங்கிய நிதேஷ், தனது அபார ஆட்டத்தின் மூலம் பிரிட்டன் வீரரை கலங்கடித்தார். இறுதியில் நிதேஷ் 23-க்கு 21 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் இந்தியா சார்பில் தங்கம் வென்ற முதல் பேட்மிண்டன் வீரர் சிறப்பையும் நிதேஷ் குமார் பெற்றுள்ளார்.

Read More : ’என் அக்கா குழந்தைக்காக கதறகிட்டு வந்தப்போ நீங்க என்ன கதறவிட்டீங்களே சீமான்’..!! சீறிய விஜயலட்சுமி..!!

English Summary

Indian player Nitesh Kumar won the gold medal in Paralympic men’s badminton tournament.

Chella

Next Post

ஆசியாவிற்கே பெருமை சேர்த்த ஃபார்முலா 4 கார் பந்தயம்..!! - அரசு பெருமிதம்

Mon Sep 2 , 2024
Chennai Formula 4 car race has marked a major milestone in the history of Tamil Nadu sports industry, said the Tamil Nadu government.

You May Like