fbpx

இந்த ஒரு மாத்திரை உங்களுக்கு புற்றுநோய், கல்லீரல் பாதிப்பை உண்டாக்கும்..!! இனியாவது கவனமா இருங்க..!!

Paracetamol | சிறு தலைவலியா? காய்ச்சலா? கை கால் வலியா? என எதுவாக இருந்தாலும், பாராசிட்டமால் மாத்திரையைத்தான் பலர் தேடிக்கொண்டிருக்கின்றனர். இதை போட்டுக்கொண்டு தூங்கச் சென்றால் மறுநாள் காலையில் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் உலகின் பல நாடுகளிலும் உள்ளது. இதனால் சர்வதேச அளவில் பாராசிட்டமால் மாத்திரைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

வலி நிவாரணியாக கருதப்படும் பாராசிட்டமால் மாத்திரை, பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது என சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பாராசிட்டமால் மாத்திரைகளால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. எலிகளுக்கு பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மாத்திரைகளை செலுத்தி மனிதர்களிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

எலிகள் மற்றும் மனிதர்களில், பாராசிட்டமால் மாத்திரைகள் கல்லீரலில் ஆபத்தான நச்சுகளை வெளியிடுகின்றன. இதனால் சிகிச்சையளிப்பது கடினம் மற்றும் ஆபத்தான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன என்பதை இந்த ஆய்வு கூறியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் கல்லீரல் செயலிழந்த நிலையிலும், பாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொள்பவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன. கல்லீரலில் இருக்கும் செல்களில் சரியான செயல்பாடுக்கு அதன் கட்டமைப்பு முக்கிய காரணமாக இருக்கிறது. பாராசிட்டமால் இந்த அமைப்பில் விரிசலை ஏற்படுத்துகிறது.

செல் சுவரில் உள்ள செல்களுக்கு இடையே உள்ள தொடர்புகளை உடைத்து புற்றுநோயை உண்டாக்குகிறது. இது செல் செயல்பாட்டைத் தடுப்பதால் உயிரணு இறப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. கல்லீரல் நோய் மட்டுமின்றி, புற்றுநோய் போன்ற பெரிய பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். பராசிட்டமால் ஒரு மலிவு மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய மாத்திரையாகும். இது முதல் முறையாக சர்வதேச அளவில் வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.

Read More : நீங்கள் அலுவலகத்திற்கு செல்லும்போது இதை எடுத்துச் செல்ல மறந்துறாதீங்க..!! என்ன தெரியுமா..?

English Summary

Shocking information has been revealed at the end of the study that there is a risk of cancer from Paracetamol tablets.

Chella

Next Post

’பஞ்சு’ தானே அப்படின்னு நினைக்காதீங்க..!! இதுலதான் ஆபத்தே இருக்கு..!! இனியும் இந்த தவறை பண்ணாதீங்க..!!

Tue Jul 16 , 2024
Do you use ear buds? May suffer bad consequences..!!

You May Like