fbpx

கோமாவுக்கு கொண்டு செல்லும் பாராசிட்டமால் மாத்திரை..!! இவ்வளவு கொடூரமான பக்க விளைவுகளா..?

நாட்டில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பெயின் கில்லர்களுக்கு பதிலாக பாராசிட்டமால் மாத்திரைகளை சாப்பிடும்படி சுகாதார அதிகாரிகள் நோயாளிகளுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். அதிக காய்ச்சல், உடல் வலி அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் கொண்டவர்கள் பாராசிட்டமால் மாத்திரையை சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது. இது டெங்கு நோயாளிகளுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

எனினும், பாராசிட்டமால் மாத்திரையை நீண்ட நாட்களுக்கு எடுப்பதும் உங்களை வேறுவிதமான சில சிக்கல்களில் மாட்டிவிடும். மற்ற மருந்துகளைப் போலவும் பாராசிட்டமால் சாப்பிடுவதாலும் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படலாம். பாராசிட்டமால் மாத்திரை வலிக்கான காரணத்திற்கு சிகிச்சை அளிக்காமல், வலியை தற்காலிகமாக போக்கக்கூடிய தன்மை கொண்டது. பொதுவாக தலைவலி, மைக்ரேன் மற்றும் மாதவிடாய் வலிக்கு கூட பலர் பாராசிட்டமால் மாத்திரைகளை சாப்பிடுவதுண்டு. ஆனால், அடுத்த 5 முதல் 6 மணி நேரம் கழித்து மீண்டும் வலி ஏற்படும். இது போன்ற சூழ்நிலையில் மீண்டும் மாத்திரையை சாப்பிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.

பாராசிட்டமால் மாத்திரையின் பக்க விளைவுகள்

தூக்க கலக்கம், சோர்வு, தோலில் தடிப்பு மற்றும் அரிப்பு போன்றவை பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பொதுவான பக்க விளைவுகள் ஆகும். அதை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது சோர்வு, மூச்சுத் திணறல், விரல்கள்-உதடு நீல நிறமாக மாறுதல்,
ரத்த சோகை (குறைந்த ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை), கல்லீரல் மற்றும் சிறுநீரக சேதம், அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும்.

பாராசிட்டமால் மாத்திரையை அதிக டோசேஜில் சாப்பிடும்போது, அடி வயிற்றில் வலி, குமட்டல், வாந்தி மற்றும் கோமா ஏற்படலாம். எனவே பாரசிட்டமால் மாத்திரைகளை சாப்பிடும் போது ஒருவர் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இது மட்டுமல்லாமல் நீங்கள் சாப்பிடக்கூடிய எல்லா மாத்திரைகளுக்கும் இதனை பின்பற்றலாம்.

Chella

Next Post

நெருங்கும் தேர்தல்..!! பெண்களுக்கு 35% இட ஒதுக்கீடு..!! மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

Thu Oct 5 , 2023
மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசின் பதவி காலம் சில மாதங்களில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், 1997ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் சட்டத்தில் இருக்கும் மகளிர் நியமனத்திற்கான சிறப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு மகளிருக்கு வனத்துறை தவிர்த்து அனைத்து அரசுத் துறைகளிலும் 35% இடஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்தியப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு […]

You May Like