அடிக்கடி பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் தொடர்பான மத்திய அரசின் தகவல் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.s
ஹிந்துஸ்தான் ஆண்டிபயாடிக் லிமிடெட், கர்நாடக ஆண்டிபயாடிக் மற்றும் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் தயாரித்த ஒரு குறிப்பிட்ட தொகுதியான மெட்ரானிடசோல் 400 மி.கி மற்றும் பாராசிட்டமால் 500 மி.கி மாத்திரைகள் தரமானது இல்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
மத்திய மருந்துப் பரிசோதனை ஆய்வகங்களால் தரம் இல்லை/ போலியான/ தவறாக முத்திரை குத்தப்பட்ட/ கலப்படம் செய்யப்பட்டவை அல்ல என்று அறிவிக்கப்பட்ட அத்தகைய மருந்துகளின் பட்டியல் தொடர்ந்து பதிவேற்றப்பட்டு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் இணையதளத்தில் மருந்துகள் தொடர்பான எச்சரிக்கை என்ற தலைப்பின் கீழ் கிடைக்கும். அந்த வரிசையில், மெட்ரானிடசோல் 400 mg, கர்நாடகா ஆண்டிபயாடிக் மற்றும் Paracetamol 500 mg ஆகியவை சோதனையின்போது நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து விதிகள் 1945இன் படி, அனைத்து உற்பத்தியாளர்களும் 1945ஆம் ஆண்டு மருந்து விதிகளின் அட்டவணை M இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நல்ல உற்பத்தி நடைமுறைகள் உட்பட உரிமத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும். மருந்துகளின் தரம் அல்லது பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில், 1940ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் மற்றும் விதிகளின்படி சம்பந்தப்பட்ட உரிமம் வழங்கும் அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படும். போலியான/ கலப்படம்/தவறான முத்திரை என கண்டறியப்பட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.