fbpx

தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை..! ஆனால், தமிழக அரசின் அறிவிப்பால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!

வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.42-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்திற்கு கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து இருந்து வரும் நிலையில், அங்கு பருவமழை வெளுத்து வாங்குவதால் அதன் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் தக்காளிவரத்து வெகுவாக குறைந்துள்ளதால், அதன் விலை ஏறுமுகத்தில் செல்ல தொடங்கி உள்ளது. கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ரூ.60-க்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் தக்காளி விலை மேலும் உயரக்கூடும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை..! ஆனால், தமிழக அரசின் அறிவிப்பால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!

தற்போது வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.42-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தக்காளி விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைவான விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் செயல்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டி.யு.சி.எஸ்.), சிந்தாமணி, நாம்கோ மற்றும் காஞ்சி மக்கள் அங்காடி முதலிய பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி தற்போது ரூ.40 முதல் 42 வரை விற்பனை செய்யப்படுகிறது”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வெளிச்சந்தையை விட மிகவும் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதால் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதை காண முடிகிறது.

Chella

Next Post

பொதுக்குழு வழக்கு..! அதிமுக தலைமை கழக நிர்வாகிகளும் சுப்ரீம் கோர்ட்டில் திடீர் மனு..!

Wed Sep 7 , 2022
அதிமுக பொதுக்குழு தொடர்பாக அதிமுக தலைமை கழக நிர்வாகிகளும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ’அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து […]

You May Like