மணிப்பூரில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் குக்கி ஆயுதம் ஏந்திய குழுவினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிஆர்பிஎப் வீரர் கொல்லப்பட்டுள்ளார். ஜிரிபாம் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மணிப்பூரில் குக்கி இனத்தவருக்கும், மெய்தி இனத்தவருக்கும் இடையே, கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இருதரப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த மாநில, ஒன்றிய பாஜக அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜிரிபாம் காவல் நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள மோங்பங்கில் காலை 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மத்திய, மாநில கூட்டு காவல் படை மீது ஆயுதம் ஏந்திய குழுவினர் நேற்று இரவு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, கூட்டு காவல் படை இன்று அதிரடி சோதனையில் இறங்கியது. அப்போது, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர் பீகார் மாநிலத்தை சேர்ந்த அஜய் குமார் ஜா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்த இரண்டு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கடந்த 15 மாதங்களாக மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து வருகிறது. அதன் மையமாக தற்போது, ஜிரிபாம் மாவட்டம் உருவெடுத்துள்ளது. இச்சம்பவம் இந்தியாவில் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Read more | நிலத்திற்கு அடியில் வித்தியாசமான உலகம்..!! சொகுசு வாழ்க்கை வாழும் மக்கள்! எங்கே தெரியுமா?