fbpx

பரங்கிமலை மாணவி கொலை : 7 தனிப்படைகள் அமைப்பு!

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயில் முன் தள்ளி கொன்ற வாலிபர் சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ் (23). அதேப் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா. கல்லூரி மாணவியான சத்தியாவை சதீஷ் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில் சதீஷும் சத்யாவும் பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ரயில்நிலையத்திற்கு வந்த ரயிலின் முன் திடீரென சத்யாவை, சதீஷ் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, ரயிலில் சிக்கிய சத்யா, சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல் தனியாக , தலை தனியாக என இருந்த சத்தியாவை ரயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். ரயில்வே போலீஸ் சார்பாக 4 தனிப்படைகளும், பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஒருதலை காதல்..!! இளம்பெண்ணை ஓடும் ரயிலின் முன் தள்ளிவிட்ட இளைஞர்..!! பரங்கிமலையில் பரபரப்பு

ஒருதலை காதல் விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடைபெற்றதா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி கொலை செய்யப்பட்ட தகவலை அடுத்து பெற்றோர்கள் சதீஷுக்கு கடுமையான தண்டனை வாங்கித் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Post

ராணுவத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் , பேருந்துகள் பயன்படுத்த திட்டம் !

Thu Oct 13 , 2022
ராணுவத்தில் பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட சில துறைகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. ராணுவத்தில் நீண்ட தொலைவில் உள்ள பணிகள் , ராணுவத்தில் உள்ள பணிகள் போன்றவற்றின் தனித்துவ செயல்பாடுகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எரிபொருள் வெளியேற்றத்தை குறைக்கும் வகையில் 3 வித வாகனங்கள் ராணுவத்தில் ஈடுபடுத்தப்படும். மோட்டார் சைக்கில் , இலகுரக வாகனங்கள் , பேருந்துகள் வாங்க உள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பிரிவுகளில் […]

You May Like