fbpx

மாணவியின் உடலை நாளை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்… நீதிபதி விதித்த நிபந்தனை..

கள்ளக்குறிச்சி மாணவி உடலை நாளை பெற்றுக் கொள்வதாக பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. இதனிடையே மாணவியின் மரணத்தில் உள்ள உண்மை கண்டறிய வேண்டும், மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கில் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.. எனினும் தங்கல் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க நீதிபதி சதீஷ்குமார் மறுத்துவிட்டார்.

இதையடுத்து மாணவி உடல் மறு பிரதே பரிசோதனை செய்யப்பட்டது.. ஆனால் அதன் பிறகும் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் மறுத்து வருகின்றனர்.. இந்நிலையில் மாணவியின் பெற்றோர், உடலை பெற்றுக்கொள்ள மறுத்து வருவதாக காவல்துறை தரப்பு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது..

அப்போது கள்ளக்குறிச்சி மாணவியின் உடற் கூறாய்வு அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.. மேலும் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோருக்கு அறிவுறுத்தி உள்ளார். பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை ஜிப்மரில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்

மேலும் நாளை நண்பகல் 11 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் மாணவியின் தந்தை தரப்புக்கு அறிவுறுத்தினார். மேலும் மகளின் உடலை நாளைக்குள் பெற்றுக்கொள்ளவில்லை எனில், காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.. எப்போது மாணவியின் உடலை வாங்க முடியும் என்று பெற்றோரிடம் தகவல் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று வழக்கறிஞருக்கு அவகாசம் அளித்திருந்தார்..

இந்நிலையில் மாணவியின் நாளை காலை 11 மணிக்குள் பெற்றுக்கொள்வதாக பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.. கடைசி நேரத்திலும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் நீதிமன்றம் தெரிவித்த நேரத்தில் உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.. அதற்கு முன்னதாகவே உடலை பெற்றுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று காவல்துறை தரப்பு தெரிவித்தது..

அப்போது நீதிபதி, நாளை காலை 7 மணிக்குள் உடலைப் பெற்றுக் கொண்டு, நாளை மாலை 6 மணிக்குள் இறுதி சடங்கை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.. மேலும் ஜிப்மர் மருத்துவக்குழு ஒரு மாதத்திற்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்..

Maha

Next Post

லிப்-லாக் சேலஞ்ச்.. வைரலான வீடியோ.. 8 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு...

Fri Jul 22 , 2022
லிப்-லாக் சேலஞ்ச் என்ற போட்டி ஏற்பாடு செய்த 8 மாணவர்கள் மீது கர்நாடக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நண்பர்கள் முன்னிலையில் ஒரு இளைஞர் பள்ளி மாணவிக்கு முத்தமிடும் வீடியோ வைரலானதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய போலீசார், மாணவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்ததாக தெரிவித்தனர். […]

You May Like