சென்னை சைதாப்பேட்டையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சின்னமலை பகுதியில் நண்பர்களுடன் 7 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.
அப்போது தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பொருளை எடுக்க அந்த சிறுவன் முயற்சித்துள்ளான். அப்போது, தவறுதலாக தொட்டிக்குள் விழுந்த சிறுவன் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தான். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.