fbpx

பெற்றோர்களே எச்சரிக்கை!… உங்கள் குழந்தைகளை அடிக்கடி திட்டுகிறீர்களா?… அப்புறம் கஷ்டம் உங்களுக்கு தான்!

பெற்றோர்கள் குழந்தைகளை திட்டிக்கொண்டே இருந்தால், என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

குழந்தையின் சிரிப்பு கொஞ்சம் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது. உங்களுக்கு வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் உங்கள் குழந்தையின் சின்ன புன்னகை இந்த உலகத்தையே ஒரு நிமிடம் மறக்கச் செய்யும். உங்கள் குழந்தைக்கு எத்தனை வயதானாலும் சரி, அவர்களின் மேல் உங்களுக்கு இருக்கக்கூடிய அன்பு உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எல்லாத் துன்பங்களையும் பிரச்சனைகளையும் எளிமையாக சமாளித்து விடும். இருந்தாலும் சில பெற்றோர்கள் குடும்பத்தில் மற்றவர்கள் மீது இருக்கும் கோபத்தை, வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் மோசமான அனுபவங்களால் தானும் பதட்டம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதை விட, குழந்தையின் மேலும் திணிக்க தொடங்கிவிடுகிறார்கள். உங்கள் குழந்தைகளை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

குழந்தைகள் என்றாலே சின்ன சின்ன தவறு செய்வது இயல்புதான். நாம் செய்வது தவறு, சரி என பிரித்துப் பார்க்கத் தெரியாது அவர்களுக்கு. என்னென்ன செய்யவேண்டும் என்று தோன்றுகிறதோ அதை செய்து கொண்டுதான் இருப்பார்கள். நாம் தான் இது சரி, இது தப்பு என்று எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும். ஆனால் சில பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளின் தவறைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், மனம் உடைந்து போகிறார்கள். அவர்களை திருத்த அல்லது அவருடைய தவறை எடுத்துச் சொல்ல முயற்சி செய்யாமல், குழந்தையை அதிகமாக திட்ட தொடங்கிவிடுகிறார்கள். இதனால் உற்சாகத்தோடு வளரவேண்டிய குழந்தைகள், பயத்தோடு வாழவும், வளரவும் தொடங்கிவிடுகிறார்கள்.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களுக்கு பயந்து, வீட்டில் பெற்றோர்களுக்கு பயந்து, நாம் செய்வது சரியா.? தவறா.? என்பது தெரியாமல், அறியாமலேயே குழந்தைகள் தங்களுடைய குழந்தை பருவத்தை கடக்கிறார்கள். என் குழந்தை எல்லா விஷயங்களிலும் திறமைசாலியாக இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கு பிடித்த மாதிரி, நீங்கள் நினைக்கிற மாதிரி உங்க குழந்தைகள் இருக்கவேண்டுமென்று ஆசைப்படாதீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்பு எல்லாம் உங்களுடைய குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள். அப்படி நீங்கள் எதிர் பார்க்கும் பொழுது உங்கள் குழந்தைகள் தவறு செய்யும் பட்சத்தில், உங்களுக்கு அவர்களின் மீது கோபம் அதிகமாக வரும்.

மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவார்கள்: தொடர்ந்து ஒருவர் திட்டிக் கொண்டே இருபார்கள். அப்போது நம்முடைய மனது உங்கள் குழந்தையை திட்டும்பொழுது , அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள். அவர்கள் அதிகமாக அழுத்தப்படுவதால் சோர்வாகவே இருப்பார்கள். என்ன செய்தாலும் அது தவறாகத்தான் இருக்கும், என்கிற மனநிலைக்கு வந்து விடுவார்கள். இது அவர்களின் வளர்ச்சிக்கும், வயதிற்கேற்ற அறிவையும் பாதிக்கும். மன உளைச்சல் தான் பல கடுமையான நோய்களுக்கு முதல்படி என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இது எதிர்காலத்தில் தற்கொலை எண்ணத்தை தூண்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

உற்சாகம் குறைவது: தொடர்ந்து திட்டுவதால் உங்கள் குழந்தையின் உற்சாகம் குறைய தொடங்கும். நாம் செய்வது தவறா.? சரியா.? என்று புரியாமல் குழம்புவார்கள். நம்முடைய அப்பா அம்மா எதற்காக திட்டுகிறார்கள் என்று யூகிக்க நாளடைவில் அவர்களுக்கு எதையும் செய்வதற்கு ஆர்வம் இல்லாமல் போய்விடும். படிப்படியாக மந்த நிலையை அடைந்துவிடுவார்கள். எந்த ஒரு விஷயத்திலும் விருப்பமில்லாமல் இருப்பார்கள். அவர்களின் வயதில் இருக்கும் பசங்களுடன் விளையாட மாட்டார்கள், பேச மாட்டார்கள், அப்படியே வீட்டிற்குள் தனியாக இருக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த நிலைமை குழந்தைகளுக்கு மறந்தும்கூட வருவதற்கு நாம் ஏற்படுத்தி விடக்கூடாது.

பாதுகாப்பற்ற உணர்வு: ஒரு குழந்தை தனக்கு அம்மா அப்பா இருக்கிறார்கள், என்ற நம்பிக்கைல் தான் இந்த உலகத்தில் வாழத் தொடங்குகிறார்கள். அவர்களை பொறுத்தவரை உலகமே அவர்களுடைய அம்மா அப்பா தான். உங்களை விட அவர்களுக்கு வேறு எதுவுமே தெரியாது, அவ்வாறு இருக்கும்போது அவர்களை நீங்கள் தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தால், உங்களிடம் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வு கிடைக்காது. குழந்தைகளுக்கு மனதளவில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் முக்கியமான கடமையாகும். இது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். பெற்றோர்களிடம் திட்டு வாங்காமல் இருப்பதற்கு குழந்தைகள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறை மறைப்பதற்காக சின்னச்சின்ன பொய் சொல்லத் தொடங்கி விடுவார்கள். குழந்தைகள் பொய் சொல்லத் தொடங்குவதற்கு முழு காரணமே குழந்தைகள் பயப்படும் அளவிற்கு நீங்கள் நடந்து கொள்வதுதான்.

உங்கள் குழந்தைகளிடம் நண்பர்களாக பழகி கொள்ளுங்கள். அப்படி இருந்தால் மட்டும்தான் எந்த பிரச்சினையாக இருந்தாலும் உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள். அவர்களுக்கு அந்த நம்பிக்கையை நீங்கள் தான் கொடுக்க வேண்டும். குழந்தை தன்னுடைய வாழ்க்கையில் எந்த இடத்திலும் பயம் இல்லாமல் இருப்பதுதான் ஆரோக்கியமானது. ஆனால் இப்பொழுது இருக்கிற காலகட்டத்தில் குழந்தை தன்னுடைய சொந்த வீட்டிலேயே பயத்தோட தான் வளர்கிறது, இது தான் உண்மையும் கூட. அளவுக்கு அதிகமாக பயம். தன்னம்பிக்கை இழக்க செய்வதோடு அவர்களின் வாழ்க்கையில் தவறான வழியில் செல்வதற்கும் தூண்டுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

உங்கள் குழந்தைகளை எப்போ பார்த்தாலும் திட்டிகிட்டே இருந்தால், அவர்கள் படிப்பு அல்லது விளையாட்டு போன்ற விஷயங்களில் ஆர்வம் குறைந்துவிடும். தனக்கு உற்சாகம் தரக்கூடிய பெற்றோரே எப்பொழுதும் திட்டிக்கொண்டே இருந்தால் அவர்கள் எப்படி ஆர்வத்தோடு இருப்பார்கள், என்று யோசித்துப் பாருங்கள்.
தொடர்ந்து எதற்கெடுத்தாலும் உங்கள் குழந்தைகளை நீங்கள் திட்டிக்கொண்டே இருந்தால் நிச்சயமாக ஒருநாள் அவர்கள், தன்னம்பிக்கை இழந்து விடுவார்கள். ஒன்றே ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். தன்னம்பிக்கையோடு வளரும் குழந்தைகள் மட்டும் தான் தங்களுடைய வாழ்க்கையில் யாருடைய துணையும் இல்லாமல் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெற்று முன்னேற முடியும்.

இல்லை என்றால் தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்குக் கூட யாரையாவது சார்ந்து வாழக்கூடிய நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள். உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகவும் நல்ல நண்பர்களாகவும் பழகிக்கொள்ளுங்கள். அவர்களை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்காமல் உங்களுடைய வீட்டில் அன்பை மட்டுமே பரவ விடுங்கள். எதையும் எடுத்துச் செல்லுங்கள் குழந்தைகள் கண்ணாடி மாதிரி, கவனமாக பயன்படுத்துங்கள். நம்முடைய அன்பில் பிறந்தவர்கள் தான் அவர்கள். அன்போடு வளருங்கள் நல்ல மனிதராக வளர்வதற்கும் எதிர்காலத்தில் வெற்றியாளராக மாற்றிவிடும்.

Kokila

Next Post

குழந்தைகள் தவறு செய்தால் தட்டிக்கொடுங்கள்!... நல்வழிபடுத்த இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

Tue May 16 , 2023
தவறும் செய்யும் குழந்தைகளை நல்வழிப்படுத்த பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து இதில் பார்க்கலாம். குழந்தைகள் தவறு செய்தால் அதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அந்த சமயத்தில் ஒன்றும் கூற வேண்டாம். ஏனெனில் உறவுகளின் முன்னிலையில் தவறு இழைப்பதை பார்த்த பின்பும் நண்பர்களின் முன்பும் குழந்தைகள் தவறு இழைத்ததை தம்பட்டம் அடித்து அவர்களை அவமானப்படுத்த வேண்டாம். குழந்தைகளுடன் தனியாக நேரம் செலவழியுங்கள். அவர்களுக்கு பிடித்த இடத்திற்கு அழைத்து சென்று தனிமையில் […]

You May Like