கொசு விரட்டி திரவத்தை குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள சக்ரதாரா பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளதால், அங்குள்ளவர்கள் கொசுவை விரட்டும் சுருள், மின்சாரம் முலம் இயக்கப்படும் ரசாயன திரவம், பேட்டரியில் இயங்கும் பேட் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தினேஷ் சவுத்ரி என்பவரும் தனது வீட்டில் மின்சாரத்தில் இயங்கும் ரசாயனம் திரவம் கொசு விரட்டியை பயன்படுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த திரவத்தை கீழே வைத்துள்ளார். அதாவது குழந்தைக்கு எட்டும் தூரத்தில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. தினேஷ் சவுத்ரியின் ஒன்றரை வயது மகள் ரித்தி, கொசு விரட்டி திரவத்தை எதிர்பாராத விதமாக குடித்துள்ளார். இதைக் கண்ட தினேஷ், அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தை ரித்தியை அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.