fbpx

பெற்றோர்களே உஷார்..!! 9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பிளஸ்2 மாணவன்..!! சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். 9ஆம் வகுப்பு படிக்கும் இளைய மகளுக்கு கடந்த சில நாட்களாக மாதவிடாய் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து அந்த சிறுமி, தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் தாய் உடனே மகளை எழும்பூரில் உள்ள குழந்தையின் நல மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்த போது அவர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய், தனது மகளிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். ஆனால், சிறுமி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

பின்னர், இதுகுறித்து எம்கேபி நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, சிறுமி அதே பள்ளியில் பிளஸ்2 மாணவனை காதலித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று சிறுமியை அந்த மாணவன் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் சிறுமியை தனிமையில் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் சிறுமியை கர்ப்பமாக்கிய வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் மகனான பிளஸ்2 மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 9ஆம் வகுப்பு மாணவியை 6 மாதம் கர்ப்பமாக்கிய பிளஸ்2 மாணவன் போக்சோவில் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ஆழ்கடலை ஆய்வு செய்யும் ’மத்ஸ்யா 6000’..!! எப்போது கடலில் இறக்கப்படும்..? வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

Fri Sep 22 , 2023
நிலவின் சந்திரயான் – 3 திட்டத்தை தொடர்ந்து சமுத்திராயன் எனப்படும் ஆழ்கடல் ஆய்வு முயற்சிக்கு இந்திய விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். கோபால்ட், நிக்கல் மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் தாதுக்களைத் தேடுவதற்காக நீர்மூழ்கி கப்பல் உருவாக்கப்படுகிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த கப்பல் 6,000 மீட்டர் நீருக்கடியில் 3 நபர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ‘மத்ஸ்யா 6000’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல், சுமார் இரண்டு ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. […]

You May Like