fbpx

பெற்றோர்களே உஷார்..!! தமிழ்நாட்டில் குழந்தைகளை அதிகம் தாக்கும் புட்டாலம்மை பாதிப்பு..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் இதுவரை 461 பேருக்கு புட்டாலம்மை அல்லது விளையாட்டம்மை எனப்படும் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு, இந்த மாதத்தில் மட்டும் 81 பேருக்கு தட்டம்மை, 264 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இது கடந்தாண்டை காட்டிலும் மிக அதிகம் என்றும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாடு முழுவதுமே புட்டாலம்மை அதிகரித்து வருகிறது. இது குறித்து பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம் கூறுகையில், ”புட்டாலம்மையை ஏற்படுத்தும் மம்ப்ஸ் வகை வைரஸ் இத்தனை நாட்கள் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதற்கு மரணம் என்பதே இல்லை. இந்த அம்மை வியாதிகளால் பாதிக்கப்படும் குழந்தைகளை தனிமைப்படுத்தி வைப்பதே ஒரே தடுப்பு மருந்தாகும் என்று தெரிவித்துள்ளார். மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தில் மக்கள் புட்டாலம்மை, தட்டம்மை, அம்மை, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் பாதிப்புகளை பதிவு செய்யலாம்” என்றார்.

புட்டாலம்மை என்றால் என்ன..?

புட்டாலம்மையானது பொதுவாக உமிழ்நீர் சுரப்பிகளை பாதிக்கும் ஒரு வைரஸால் ஏற்படுகிறது. வீங்கிய சுரப்பிகள் வலியை ஏற்படுத்தலாம். புட்டாலம்மைக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. தடுப்பு நடவடிக்கையாக குழந்தைகளுக்கு தட்டம்மை, அம்மை மற்றும் ரூபெல்லா (எம்எம்ஆர்) தடுப்பூசி போடப்படுகிறது.

Read More : விசிக-வுக்கு ’பானை’ சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்..!! திருமாவளவன் ஹேப்பி..!!

Chella

Next Post

நடிகர் சேஷுவுக்கு உண்மையில் நடந்தது என்ன..? அதெல்லாம் வதந்தி..!! இதுதான் உண்மை..!! நடிகர் பழனியப்பன் பகீர் வீடியோ..!!

Sat Mar 30 , 2024
லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் சேஷு சில தினங்களுக்கு முன்பு காலமானார். இந்நிலையில், அவருடைய மரணம் குறித்து சிலர் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் பழனியப்பன் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “எல்லோருக்கும் வணக்கம் நான் இப்போ எதுக்காக இந்த வீடியோ வெளியிட்டு இருக்கிறேன் என்றால் சேஷு அண்ணாவோட மரணத்தை பற்றி தான் பேசப்போகிறேன். சேஷு […]

You May Like