fbpx

“நாங்க யாருக்கும் பாரமா இருக்க விரும்பல”; மகனின் செயலால் பெற்றோர் தற்கொலை..

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் தாட்கோ காலனியை சேர்ந்தவர் 55 வயதான பெரியசாமி. கூலித் தொழில் செய்து வரும் இவருக்கு, 46 வயதான சாந்தா என்ற மனைவியும், 29 வயதான புனிதா என்ற மகளும், 26 வயதான கண்ணதாசன் என்ற மகனும் உள்ளனர். புனிதாவிற்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வரும் நிலையில், கண்ணதாசன் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் நேற்று வேலைக்கு கண்ணதாசன், மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.

நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த கண்ணதாசன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கு அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் ஒயரால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணதாசன், எருமப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெரியசாமி, சாந்தாவின் உடல்களை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில், பெரியசாமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிக்சை செய்யப்பட்டதால் அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. மேலும், அவரது மனைவி சாந்தாவுக்கும் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தா தவறி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சாந்தாவும், பெரியசாமியும் வலியால் அவதிபட்டு வந்த நிலையில், இவர்களின் மகன் கண்ணதாசன், மருத்துவ செலவிற்கும், குடும்ப செலவுக்கும் பணம் கொடுக்காமல் இருந்துள்ளார்.

மேலும், மது பழக்கத்திற்கு அடிமையான கண்ணதாசன், அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த தம்பதி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Maha

Next Post

பதற்றம்: எங்கும் ஒலிக்கும் சைரன் சத்தம்..! ஹமாஸின் பொருளாதார அமைச்சர் ஜவாத் அபு ஷமாலா சுட்டுக் கொலை.., இஸ்ரேல் தகவல்…!

Tue Oct 10 , 2023
கடந்த 2007 ஆம் ஆண்டு இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் காசா மீது இஸ்ரேல் முற்றுகையைத் தொடங்கியது. அதன்படி, காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 7ம் தேதி சனிக்கிழமை தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து 5,000 ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது […]

You May Like