fbpx

பெற்றோர்களே உங்கள் வீட்டில் ஊஞ்சல் இருக்கா..? உஷாரா இருங்க..!! பறிபோன மாணவியின் உயிர்..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் முனீஸ்வரன்-முத்துமாரி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் முத்துமாரி தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். முத்துமாரியின் மூத்த மகள் ஷீலா (14) சாத்தங்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், சம்பவத்தன்று முத்துமாரி அவரது தாயாருடன் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஷீலா தொட்டிலில் ஊஞ்சல் ஆடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் சேலை முறுக்கிக் கொண்டது. இதில் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலையில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த முத்துமாரி மற்றும் அவரது தாயார் தனது மகள் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து அங்கிருந்தவர்கள் திருமங்கலம் தாலுகா போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக முத்துமாரி அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த சிறுமி, எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

’இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்’..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Tue Sep 12 , 2023
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 417 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மண்டல வாரியாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன. விழுப்புரம், கோவை, நாகர்கோவில், சேலம், எம்.டி.சி சென்னை, தருமபுரி, நெல்லை ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 417 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தான் தற்போது வெளியாகியுள்ளது. 335 பணியிடங்களுக்கு மெக்கானிக்கல் என்ஜினியரிங் அல்லது ஆட்டோ […]

You May Like