fbpx

பெற்றோர்களே கண்காணிக்க மறந்துறாதீங்க..!! சிறுவர்களுக்கு போதை ஆசை..!! உங்கள் குழந்தைகளுக்கும் நடக்கலாம்..!!

தமிழ்நாடு முழுவதும் மதுவுக்கு எதிராக பிரச்சாரங்களும், எதிர்ப்புகளும் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், கள்ளச்சாராயம் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசே டாஸ்மாக் என்ற பெயரில் மது விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. மதுவுக்கு பலரும் அடிமையாகி பல இன்னல்களை சந்தித்து வந்தாலும், அந்த மதுப்பழக்கத்தில் இருந்து மீள்வது என்பது முடியாத காரியமாக இருந்து வருகிறது.

மேலும் பள்ளி, கல்லூரி என பாகுபாடு இன்றி இளம் வயதினரும் அதிக அளவில் தற்போது குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். மது அருந்தி பல இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்று பல பிரச்சனைகள் இருந்தாலும் பூரண மதுவிலக்கு என்பது ஒரு சாத்தியமில்லாத விஷயமாகவே தமிழகத்தில் தொடர்கிறது.

மேலும், மது பிரியர்கள் மது அருந்துவதும், மது போதையில் தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் குழந்தைகளுக்கும் மதுவினை குடிக்க கொடுக்கும் நிகழ்வுகளும் பல்வேறு இடங்களில் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு கிராமத்தில் 9 வயது சிறுவனுக்கு இளைஞர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. மதுவினை அருந்திய சிறுவன் மயக்க நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை சிறுவனை தூக்கிக்கொண்டு மயிலாடுதுறை காவல் நிலையம் வந்து புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அறிவழகன் என்பவர் தன் மகன் மற்றும் மற்றொரு சிறுவனுக்கு மதுவை ஊற்றி குடிக்க வைத்து உள்ளதாகவும், இதனால் மது போதையில் சிறுவன் மயக்க நிலைக்கு சென்றுள்ளதாகவும், சிறுவனை தூக்கிக்கொண்டு நேரடியாக காவல் நிலையத்துக்கு வந்து பெற்றோர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை காவல்துறையினர் உடனடியாக சிறுவனை மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துனர்.

சிறுவனுக்கு மது ஊற்றிக் கொடுத்து தலைமறைவாக இருந்த இளைஞரை தேடி வந்த நிலையில், அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது குடித்ததால் மயக்கம் ஏற்பட்ட சிறுவனுக்கு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவன் உடல்நலம் தேறியுள்ளான். சிறுவர்களை பெற்றோர்கள் தங்கள் கண்காணிப்பில் வைக்க தவறினால் இது போன்ற விபரீத சம்பவங்கள் அரங்கேறும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்றாக மாறி உள்ளது.

Chella

Next Post

கோவை| மதம் சார்ந்த விவகாரங்களில் தீவிர செயல்பாடுகள் உடையவர்களை கண்காணிக்கும் காவல்துறையினர்…..!

Thu Jun 15 , 2023
கோவை மாநகரில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்னர் சென்ற வருடம் அக்டோபர் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவருடைய வீட்டில் வெடி மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இது தொடர்பாக நடத்திய விசாரணையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த அந்த பயங்கரவாதி கோவையில் […]

You May Like