fbpx

பெற்றோர்களே..!! உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட்டாச்சா..? நாளையே கடைசி..!! இலவசம் தான்..!! மறந்துறாதீங்க..!!

தமிழ்நாடு முழுவதும் தேசிய தடுப்பூசி அட்டவணையின் படி, மொத்தம் 11 வகை தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு இலவசமாக செலுத்தப்படுகிறது. அதன்படி காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், ரண ஜன்னி, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், தொண்டை அடைப்பான், இன்’ஃ’ப்ளூயன்ஸா தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, இளம் பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின் – ஏ குறைபாடு பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இதனால் 9.40 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த தடுப்பூசிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உட்பட 11,000 இடங்களில் வழங்கப்படுகின்றன. முதல் தவணைக்கு பிறகு அடுத்த தவணையை சில குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் பெற்றோா் செலுத்துவதில்லை.

இதனால், 100 சதவீத தடுப்பூசி இலக்கை அடையவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும் சிறப்பு நடவடிக்கையை பொது சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது. அதன்படி, அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்யும் வகையில், சிறப்பு தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. அதில் நிமோனியா மூளைக் காய்ச்சல், தொண்டை வீக்கம் உட்பட 5 வகையான நோய்களில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க பெண்டாவேலன்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறுகையில், ” குழந்தை பிறந்து 4, 10, 14-வது வாரங்களில் பெண்டாலேன்ட் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. உரிய தவணையில் தடுப்பூசி செலுத்தத் தவறியவா்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில், பெண்டாலேன்ட் தடுப்பூசி மட்டுமன்றி, ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் விடுபட்ட மற்ற தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார்.

Read More : 110 ஆண்டுகள் வரலாறு!. டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய மைல்கல்!. பும்ரா அசத்தல்!

English Summary

In addition to the Pentalent vaccine, other vaccines that are not included in the Integrated Vaccination Program can also be administered.

Chella

Next Post

மகிழ்ச்சி...! காவலர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம்...! அரசு சார்பில் வழிகாட்டுதல் வெளியீடு...!

Mon Dec 30 , 2024
Free travel on government buses for police officers

You May Like