fbpx

பெற்றோர்களே!.. நூடுல்ஸ் எமன்!… அதிர்ச்சியளிக்கும் வீடியோ!… குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்!

Noodles: இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பெரும்பாலான குடும்பங்களில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அன்றாட உணவுகளில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. காரணம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காலை பரபரப்புக்கு இடையே சீக்கிரம் லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்ய வேண்டும். கணவருக்குத் தனியாக சாப்பாடு செய்ய வேண்டும். இதுதவிர குழந்தைகள் அடம் பிடிக்காமல் சாப்பிடக்கூடிய உணவுகளில் பிரதானமாக நூடுல்ஸ்கள் மாறிவிட்டன.

இந்த உடனடி நூடுல்ஸை மிதமான அளவில் உட்கொள்வதால் பெரிதாக கவலைப்படும் அளவுக்கு உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. இருந்தாலும் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் உங்கள் குடும்ப உணவின் வழக்கமான ஒரு பகுதியாக மாறியிருந்திருக்குமானால் அது உங்கள் குடும்பத்தாரின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மோசமான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம்.

இருப்பினும், உடனடி நூடுல்ஸுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்கள் நிறைய உள்ளன, இந்த வைரல் வீடியோவைப் பார்த்த பிறகு, உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதை நிறுத்த முயற்சியுங்கள். ஒரு நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்யப்பட்ட நூடுல்ஸ் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ @cooltechtipz என்ற கணக்கின் மூலம் பகிரப்பட்டுள்ளது.

அந்தவீடியோவில், கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் ஊர்ந்து செல்வதை நுண்ணோக்கி மூலம் பார்க்கலாம். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ கிளிப் 14,000 முறைக்கு மேல் பகிரப்பட்டுள்ளது மற்றும் 3.1 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

Readmore: பயங்கர நிலச்சரிவு!… பலி எண்ணிக்கை 300 ஆக உயரும் அச்சம்!… பாறைகளால் மீட்பு பணியில் சவால்!

Kokila

Next Post

வருகிறது... புதிய ரேஷன் அட்டை... புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை...!

Sat May 25 , 2024
பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் அவர்களது சுயமரியாதையை காக்கும் வகையிலும் தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தற்போது சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனாளர்களாக உள்ளனர். அனைவருக்கும் உரிமைத் தொகையை வழங்க வேண்டும் என்கின்ற […]
மகளிர் உரிமைத்தொகை திட்டம்..!! உங்களுக்கு ஏதேனும் சந்தேகமா..? விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியீடு..!!

You May Like