fbpx

மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க பெற்றோர் மறுப்பு..!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

`கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை’ என்று சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. 

மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க பெற்றோர் மறுப்பு..!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்றக்கோரி கோரிக்கை விடுத்த நிலையில், வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதால் இந்த மனுவை ஏன் முடித்து வைக்க கூடாது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை கண்காணித்து வருகிறது. ஏற்கனவே இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கிய குறுந்தட்டை எங்கள் தரப்புக்கு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க பெற்றோர் மறுப்பு..!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

ஏற்கனவே, இந்த வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை வழக்கு தொடர்பான ஆவணங்களை மாணவியின் பெற்றோர் தரப்புக்கு வழங்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதை சுட்டிக்காட்டிய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், “வழக்கின் புலன் விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் ஒத்துழைக்க மறுக்கின்றனர். விடுதியில் மாணவி பயன்படுத்திய மொபைல் ஃபோனை வழங்க மறுக்கின்றனர். மரபணு சோதனைக்கு மாதிரிகள் வழங்க மறுக்கின்றனர்” என குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, மாணவி செல்போன் பயன்படுத்தி இருந்தால் அதை புலன் விசாரணை செய்யும் சிபிசிஐடி போலீசாரிடம் வழங்க வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடுத்த அறிக்கையை அக்டோபர் 10ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Chella

Next Post

இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படம் என்ன..? நடிகர் யார் தெரியுமா..? வெளியான மாஸ் அப்டேட்

Tue Sep 27 , 2022
இயக்குநர் மாரி செல்வராஜ் ஓடிடி தளத்திற்காக புதிய வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு […]
இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படம் என்ன..? நடிகர் யார் தெரியுமா..? வெளியான மாஸ் அப்டேட்

You May Like