fbpx

ஷாக்…! வாகன நிறுத்த கட்டணம் உயர்வு…! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு…! முழு விவரம்

மெட்ரோ ரயிலில் பயணிக்காமல், வாகன நிறுத்தத்தை மட்டும் பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களின் பயன்பாட்டின் அடிப்படையில் பின்வரும் மாற்றங்களை செய்துள்ளது.

கடந்த 30 நாட்களில் குறைந்தது 15 பயணங்கள் செய்த மெட்ரோ பயணிகளுக்கு மாதாந்திர பாஸ் வசதி, விம்கோ நகர் பணிமனை, ஸ்ரீ தியாகராய கல்லூரி, நேரு பூங்கா, கோயம்பேடு, அசோக் நகர் மற்றும் ஆலந்தூர் மெட்ரோ ஆகிய 6 மெட்ரோ இரயில் நிலையங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய வண்ணாரப்பேட்டை, நந்தனம், எழும்பூர் மற்றும் செனாய் நகர் மெட்ரோ ஆகிய 4 மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் இட வசதி இல்லாத காரணத்தினால் மாதாந்திர பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ இரயில்களில் பயணிக்காமல் வாகன நிறுத்தும் வசதியை மட்டும் பயன்படுத்துபவர்களின் தேவை அதிகரித்துள்ளதால், திருவொற்றியூர், திருவொற்றியூர் தேரடி, காலடிப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர்நீதிமன்றம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி. நந்தனம், கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், விமான நிலையம், அசோக் நகர், திருமங்கலம், மற்றும் எழும்பூர் மெட்ரோ என 18 மெட்ரோ இரயில் நிலையங்களில் மெட்ரோ பயணிகள் அல்லாதவர்களின் வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 30 நாட்களில் மெட்ரோ இரயிலில் பயணம் செய்யாதவர்கள் அல்லது 15-க்கும் குறைவான பயணம் செய்தவர்களுக்கு அரும்பாக்கம் மெட்ரோ மற்றும் பரங்கி மலை மெட்ரோ இரயில் நிலையங்களில் மாதாந்திர வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ள மற்ற மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் கட்டணத்தில் எவ்வித மாற்றம் இல்லை. மேலும் விவரங்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் https://Chennaimetrorail.org/parking-tariff என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

UTS செயலியில் வந்தது அதிரடி மாற்றம்.. இத செய்யலன்னா உங்க டிக்கெட் கேன்சல்!!

Tue Apr 30 , 2024
யுடிஎஸ் செயலி மூலம் ரயிலில் முன்பதிவில்லாத டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்கும் நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் வீடு உள்பட எங்கிருந்து வேண்டுமானாலும் ரயில் டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்து கொள்ள முடியும். பயணிகள் ரயில் நிலையத்திற்கு செல்ல நடைமேடை டிக்கெட் என தொடங்கி  மெட்ரோ மற்றும் சீசன் டிக்கெட் போன்றவற்றை புக் செய்ய யூடிஎஸ் செயலியை பயன்படுத்தி வந்தனர். இதனை […]

You May Like