fbpx

ஆயுளை அதிகரிக்கும் பூங்காக்கள்!… எப்படி தெரியுமா?… அமெரிக்க ஆய்வில் தகவல்!

பூங்காங்கள் மற்றும் பசுமை நிறைந்த சூழல் அருகே வசிப்போருக்கு, மற்றவர்களை விட வயது மெதுவாக அதிகரிப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

பசுமை பரப்பிற்கும், வயது மெதுவாக அதிகரிப்பதற்கும் இடையேயான தொடர்பு குறித்து அமெரிக்காவை சேர்ந்த நார்த்வெஸ்டர்ன் பல்கலை விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆய்வு நடத்தினர். அதன் முடிவுகள் சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழில் கடந்த ஜூலை மாதம் வெளியானது. அதில், பூங்காக்கள் மற்றும் தாவரங்கள், மரங்கள் நிறைந்த பசுமையான இடங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு மெதுவாக வயதாகிறது என்று கண்டறியப்பட்டது. சராசரியாக, பசுமை குறைந்த சூழல் அருகே வாழ்ந்தவர்களை விட உயிரியல் ரீதியாக, இரண்டரை வயது இளமையானவர்களாக காணப்பட்டனர்.

பொதுவாக உண்மையான வயதை விட இளமையாகவோ அல்லது பெரியவர்களை போலவோ தோன்றும் நபர்களை சந்தித்திருப்போம். இது பெரும்பாலும் அவர்களின் எபிஜெனெடிக் வயதைப் பொறுத்தது. இது வழக்கமாக அவர்களுக்கு எவ்வளவு வயதாகிறது என்பதில் இருந்து மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். நம்முடைய வயது கண்டிப்பாக நம் பிறந்ததேதியை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், நமது எபிஜெனிடிக் வயது நமது உடலின் செல்கள் உண்மையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை பொறுத்து மாறுபடும். உணவு, உறக்கம், உடற்பயிற்சி, புகை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் உயிரியல் வயதில் மாற்றம் இருக்கலாம்.

ஒட்டுமொத்தமாக நமது உடல் வயதாக, சுற்றுச்சூழல் எவ்வளவு முக்கிய பங்காற்றுகிறது என்பதை ஆய்வு காட்டுகிறது. இனம், பாலினம் மற்றும் சமூகப் பொருளாதார நிலை போன்ற காரணிகளும், வயதானவரை தீர்மானித்தாலும், நீண்ட கால அடிப்படையில் அதாவது 20 வருடங்களுக்கும் மேலாக பசுமையான இடங்களுக்கு அருகில் வசிப்போர் மிகவும் ஆரோக்கியமான வயதானவர்களாக உள்ளனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது அதிகரிக்க துவங்கும் போது, இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் அறிவாற்றல் செயல்பாடு உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளின் ஆபத்து அதிகமாகி வருகிறது. விரைவான நகரமயமாக்ககல், தவிர்க்க முடியாமல் பசுமையான சூழலை இழக்க வழிவகுக்கிறது. இந்தியாவின் பெருநகரங்கள் இத்தகைய சோகமான வளர்ச்சிக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக உள்ளது. நிலையான வளர்ச்சி மற்றும் அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க, பசுமை பரப்பை அதிகரிக்க முதலீடு செய்வது அவசியமாகிறது.

Kokila

Next Post

நித்தியானந்தாவின் கற்பனை தேசத்துடன் ஒப்பந்தம் செய்த நாடு..!! அமைச்சரின் பதவி பறிப்பு..!!

Fri Dec 1 , 2023
திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தாவுக்கு (45) தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்கள் உள்ளன. கர்நாடகாவின் பிடதியில் 200 ஏக்கர் பரப்பில் அவரது தலைமை பீடம் செயல்படுகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் அவருக்கு பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய நித்தியானந்தா, கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் தலைமறைவானார். அதே ஆண்டு டிசம்பரில் கைலாசா என்ற பெயரில் புதிய நாட்டை உருவாக்கி இருப்பதாக […]

You May Like