fbpx

பல கோடிக்கு அதிபதி.. சொகுசு வாழ்க்கையை உதறி வாடகை வீட்டில் வசிக்கும் பார்த்திபன்..!! சொத்து மதிப்பு தெரியுமா?

தமிழ் திரை உலகப் பொருத்த வரை தன்னோடு இணைந்து நடிக்கக்கூடிய சக நடிகைகளை திருமணம் செய்து கொள்வது புதிதல்ல. அந்த வகையில் இயக்குனர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதா இருவரும் காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்த பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து இவர்களது இந்த பந்தம் நீடித்து நிலைத்து நிற்காமல் திருமணம் ஆன 11 வருடங்களில் விவாகரத்தில் முடிந்தது.

சீதா வேறு ஒரு சீரியல் நடிகரை காதலித்து தான் சீதா – பார்த்திபன் பிரிய காரணம் என்கிற ஒரு தகவல் ஒரு பக்கம் உலா வந்தாலும், மற்றொருபுறம் பார்த்திபன் செய்த் துரோகம் தான் சீதா அவரை விட்டு பிரிய காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுவரை இருவருமே வெளிப்படையாக தங்களின் விவாகரத்துக்கான காரணத்தை கூறியது இல்லை. வாழ்க்கையில் இருவரும் பிரிந்தாலும், தங்களுடைய பிள்ளைகள் விஷயத்தில் இருவருமே சேர்ந்து தான் முடிவெடுக்கின்றனர்.

கீர்த்தனா மற்றும் அபிநயா திருமணத்தில் கூட சீதா – பார்த்திபன் சேர்ந்து இருந்தனர். பார்த்திபன் சில படங்களை தயாரித்து அதன் தோல்வியால் நஷ்டத்தை சந்தித்திருந்தாலும், கடைசியாக இவர் இயக்கி, தயாரித்து, நடித்திருந்த, இரவின் நிழல் மற்றும் டீன்ஸ் ஆகிய படங்கள் நல்ல லாபத்தை பெற்று தந்தை. அதே போல் தான் நடிக்கும் படங்களுக்கு 3 முதல் 5 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

டீன்ஸ் படத்தின் புரோமோஷனின் போது தான் வாடகை வீட்டில் தான் வசித்து வருவதாக கூறிய பார்த்திபனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பார்த்திபன் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக ஹீரோவாக நடித்தும், திரைப்பட தயாரிப்பின் மூலமும் ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை சொத்துக்கு அதிபதியாக உள்ளார். ஆனால் சிறு வயதில் இருந்து ஏழ்மையில் வாழ்ந்த பார்த்திபன் ராஜ வாழ்க்கை வாழும் அளவுக்கு சொத்துக்கள் இருந்தாலும் எளிமையையே விரும்புகிறார்.

Read more ; புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல்.. விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

English Summary

Parthiban lives in a rented house leaving behind a luxurious life..!! Do you know the property value?

Next Post

இன்று 13 மாவட்டத்தில் கனமழை.. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்...! வானிலை மையம் எச்சரிக்கை

Mon Dec 2 , 2024
Heavy rain in 13 districts of Tamil Nadu today

You May Like