தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் இன்று (ஆகஸ்ட் 22) விஜய் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் கீழும் சிகப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் உள்ள அந்த கொடியில் வாகை பூவும், 2 யானைகளும் இடம்பெற்றிருந்தனர். நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் “தமிழன் கொடி பறக்குது… தலைவன் யுகம் பிறக்குது” எனத் தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டது. பாடலாசிரியர் விவேக வரியில், தமன் இசையில் இந்த பாடல் உருவானது. இந்த கட்சிக் கொடியை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து எளிமையான முறையில் நடைபெற்றது.
பாடல் வரிகள் ;
மனமே மனமே வா வா நிஜமே,,
கொடியே கொடியே காவல் கொடியே,,
தலைவா தலைவா காவல் தர வா..
வெற்றிக் கழகக் கொடியேறுது நம்ம சனத்தின் விதி மாறுது
வெற்றிக் கழகக் கொடியேறுது மக்கள் ஆசை நிஜமாகுது
வெற்றிக் கழகக் கொடியேறுது நம்ம சனத்தின் விதி மாறுது
வெற்றிக் கழகக் கொடியேறுது மக்கள் ஆசை நிஜமாகுது
தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது
மூனெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது
தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது
மூனெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது..
சிறுசும் பெருசும் ரசிக்குது.. சிங்கப் பெண்கள் சிரிக்குது
மக்களோட தொப்புள் கொடியில் மொளச்ச கொடியும் பறக்குது
மனசுல மக்களை வைக்கும் தலைவன் வரும் நேரமிது
மக்களும் அவன மனசில் வச்சு ஆடிப்பாடி கூப்பிடுது
சிகரம் கிடைச்ச பின்னும் இறங்கி வந்து சேவை செஞ்சு
நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலமிது
தமிழா தமிழா நம்ம வாழ போறமே
ஒரு கரை இல்லாத கைய புடிச்சு போகப் போறோமே
தமிழா தமிழா நம்ம வாழ போறமே
ஒரு கரை இல்லாத கைய புடிச்சு போகப் போறோமே
தமிழன் கொடி தலைவன் கொடி.. தர்மக்கொடி தரையின் கொடி.. வீரக் கொடி விஜயக் கொடி.. ஆதி குடிய காக்கும் கொடி
ரத்த சிவப்பில் நிறமெடுத்தோம்.. ரெட்டை யானை பலம் கொடுத்தோம்
நரம்பில் ஓடும் தமிழ் உணர்வ உருவி, கொடியின் உருக் கொடுத்தோம்
மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம்.. பச்சை நீலத் திலகம் வச்சோம்
பரிதவிக்கும் மக்கள் பக்கம் சிங்கம் வர்றத பறையடிச்சோம்
தூரம் நின்னு பாக்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது
தோளில் வந்து கையை போடும் தலைவன் கொடி ஏறுது
அரசரைக் கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி
அன்னைக்கே சொன்னோமே இது ஆளப்போற தமிழன் கொடி
தலைவன் கொடி.. தர்மக்கொடி தரையின் கொடி.. வீரக் கொடி
வெற்றி வாகை சூடப்போற விஜயக் கொடி மக்கள் கொடி
தமிழன் கொடி பறக்குது!
பாடல் அர்த்தம்
“மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் ஒலிக்குது” என்ற வரிகள் அப்பாடலில் வருகின்றன. இதில் அந்த மூணெழுத்து மந்திரம் என்பது இது தமிழக முன்னாள் முதல்வர் ‘எம்ஜிஆர்’-யை குறிக்கும்படி அமைந்துள்ளது. எம்.ஜி.ஆரும் சினிமாவிலிருந்து அரசியலில் வந்தவர் ஆவார், விஜயும் சினிமாவிலிருந்து அரசியல் களத்தில் குதித்துள்ளார். இருவரின் பெயர்களும் ‘மூன்றெழுத்து’ தான், அதை தான் அந்த வரிகள் கூறுகின்றனர்.
“சிகரம் கிடைச்ச பின்னும் எறங்கி வந்து சேவ செஞ்சு, நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலம் இது” என்ற வரிகளின் மூலம் சினிமாவில் பல கோடிகள் வருமானத்தை விட்டு அரசியலுக்கு வந்து சேவை செய்யவுள்ளேன் என்பதை இதில் விஜய் குறிப்பிட்டுள்ளார். “அரசரைக் கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி”, “தூர நின்னு பாக்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது தோளில் வந்து கைய போடும் தலைவன் கொடி ஏறுது” உள்ளிட்ட வரிகள் மேற்கொண்டு இளைஞர்களைச் சிந்திக்க வைக்கிறது
பாடலின் நடுப்பகுதியில் தவெக கட்சிக் கொடியை ஒரு இந்து, ஒரு முஸ்லிம், ஒரு கிறிஸ்துவன் ஏந்தி நிற்பதைப் போல ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மதங்களைத் தாண்டி அனைவருமே சமம் என்பதை இந்த பாடலின் மூலம் தெரிவித்துள்ளார் விஜய். இப்படி பல வரிகள் பேசவைப்பதோடு நம்மை சிந்திக்கவும் வைக்கிறது.
Read more ; அதிர்ச்சி..!! போலி NCC பயிற்சி.. மற்றொரு பள்ளியில் சிறுமி பாலியல் வன்கொடுமை..!! சிக்கிய சிவராமன்