fbpx

இண்டிகோ விமானத்தின் உணவுப் பகுதியில் கரப்பான்பூச்சிகள்.! வைரல் வீடியோவால், நிறுவனம் எடுத்த உடனடி நடவடிக்கை.!

இண்டிகோ விமானத்தில் சென்ற ஊடகவியலாளர் ஒருவர், அதன் உணவு பகுதியில் கரப்பான் பூச்சிகள் இருப்பதை வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினார். பலரும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சுகாதாரத் தரங்கள் குறித்து கண்டனம் எழுப்பிய நிலையில், விமான நிறுவனம் தனது தவறை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டுள்ளது.

தருண் சுக்லா என்ற ஊடகவியலாளர், இண்டிகோ விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதன் உணவு பகுதியில் கரப்பான் பூச்சிகள் கூறுவதை கண்டார். அதனை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி அவர், தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அந்த பதிவை கண்ட பலரும், இண்டிகோ விமான நிறுவனத்தை குறித்து மோசமாக விமர்சித்தனர். சிலர் இனிவரும் காலங்களில் இண்டிகோ விமானங்களில் பயணம் செய்வதை, முழுவதுமாக தவிர்க்கப் போவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இண்டிகோ நிறுவனம் தருண் சுக்லா இட்ட பதிவுக்கு பதிலாக, தங்களின் ஊழியர்கள் விமானத்தை முழுவதுமாக சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக தெரிவித்தது. முழு விமானத்திலும் புகையூட்டம் செய்தும், கிருமி நீக்கம் செய்தும் தூய்மை பணிகளை செய்ததாக கூறியுள்ளது. மேலும் பயணிகளுக்கு பாதுகாப்பான, தொந்தரவு இல்லாத பிரயாண அனுபவத்தையே தாங்கள் தர விரும்புவதாகவும், சுகாதாரத்தின் உயர்ந்த தரத்தினை பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ளது.

தருண் சுக்லாவின் பதிவை கண்டவுடன் இண்டிகோ நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலரிடம் பாராட்டுகளையும் பெற்றது. எனினும் இது போன்ற சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளை, இந்த நிறுவனம் எதிர்கொள்வது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இண்டிகோ விமானத்தில் உணவு அருந்தி கொண்டிருந்தபோது, மேஜையில் கரப்பான் பூச்சி ஊறுவதை பயணி ஒருவர் வீடியோவாக பகிர்ந்திருந்தார். இதேபோல் கடந்த அக்டோபரிலும் வேறொரு பயணி, பாட்னாவில் இருந்து டெல்லிக்கு சென்ற போது கரப்பான் பூச்சி தொடர்பான வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் இண்டிகோ நிறுவனத்தின் சுகாதாரத் தரத்தை கேள்விக்கு உட்படுத்துகிறது.

English summary: Passenger spotted cockroaches in the food area of Indigo flight. Indigo has take necessary actions after the video went viral.

Read more: இண்டிகோ விமானத்தின் உணவுப் பகுதியில் கரப்பான்பூச்சிகள்.! வைரல் வீடியோவால், நிறுவனம் எடுத்த உடனடி நடவடிக்கை.!

Next Post

GYANVAPI MASJID: பூஜைக்கு தடை விதிக்க முடியாது.! அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு.!

Mon Feb 26 , 2024
Gyanvapi மசூதி வழக்கில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மசூதியை நிர்வகிக்கும் குழு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபடுவதற்கு உத்தரவு பிறப்பித்த வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஞானவாபி மசூதி கமிட்டி சார்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் மாநிலம் […]

You May Like