ஆந்திராவில் பயணிகள் ரயில் தடம் புரண்டுதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விசாகப்பட்டினம் – சம்பல்பூர் சென்ற நாகவள்ளி எக்ஸ்பிரஸ் ரயில், விஜயநகரம் அருகே தடம் புரண்டது.
இந்த விபத்து ஏற்படும் சமயத்தில் ரயில் மெதுவாக சென்றதால் பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக உயிர்சேதம் இல்லை என ரயில்வே அதிகாரிகள், உறுதியளித்துள்ளனர். இரு தினங்களுக்கு முன் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ரயில் தடம் புரண்டு விபத்து போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ரயில்வே துறை மேலதிக கவனம் செலுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Read More: நாடு முழுவதும் 2வது முறையாக UPI செயலிழப்பு..! பயனர்கள் அவதி…!