fbpx

பயணிகளுக்கு குட் நியூஸ்….. பஸ், மெட்ரோ, ரயிலில் ஒரே டிக்கெட்டில் பயணம்….

பேருந்து, மெட்ரோ, ரயில் என ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வகையில் திட்டம் செயல்பாட்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பொதுபோக்குவரத்தாக பேருந்து, மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் வசதிகள் உள்ளன. இதில், இதுவரை மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்து வந்தனர்.

சென்னையில் பேருந்து, மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என அண்மையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரி இருந்தது.

இந்நிலையில் ஜூன் 2ம் வாரம் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.  இதன் மூலம் ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி 3 வகையான போக்குவரத்திலும் பயணிக்க வசதியாக பிரத்யேக கார்டு ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தக் கார்டுகளை  ரீசார்ஜ் செய்து மக்கள் பயணித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க காலை உணவு ரொம்ப முக்கியம்..!! அதுவும் இப்படி சாப்பிடுங்க..!!

shyamala

Next Post

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

Wed May 15 , 2024
Cordite Factory Aruvankadu ஆனது CPW Personnel பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கென 156 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணியின் விவரங்கள்… நிறுவனம் – Cordite Factory Aruvankadu பணியின் பெயர் – CPW Personnel பணியிடங்கள் – 156 விண்ணப்பிக்கும் முறை – Offline காலிப்பணியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி CPW Personnel பணிக்கென 156 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. […]

You May Like