fbpx

பயணிகளே நோட் பண்ணுங்க..!! ரயிலில் தூங்கும் நேரம் மாற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இந்தியாவில் நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே நம்பி இருக்கின்றனர். குறைவான கட்டணத்தில் பாதுகாப்பான பயணங்கள் இருப்பதால் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து ரயில் இருக்கிறது. தினசரி ரயிலில் பல லட்சம் பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், பயணிகளுடைய தூங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் நடுத்தர பெர்த் ஒதுக்கப்பட்ட பயணிகள் 8 மணி நேரம் மட்டுமே தூங்க வேண்டும். முன்பு இந்த நேரம் 9 மணியாக இருந்த நிலையில், தற்போது இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க முடியும் என நிலை இருந்து வருகிறது. இந்த விதி தற்போது நடுத்தரப் பெர்த் இரவு 10 மணிக்கு பிறகு தான் திறக்க முடியும். காலை 6 மணிக்கு நடுத்தர பெர்த்தை மூடி விட வேண்டும். மிடில் பெர்த் பயணிகள் பகலில் தூங்கக் கூடாது.

இதன் மூலமாக கீழ்ப் பெர்த் பயணிகள் 8 மணி நேரத்துக்கு பிறகு நடு பெர்த்தை மூடுமாறு கேட்கலாம். மேல் பெர்த்தில் உள்ள பயணிகள் பகல் நேரத்தில் கீழ்ப் பெர்த்தில் அமர்ந்து கொள்ளலாம். அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் நீண்ட நேரம் தூங்குவதற்கு சக பயணிகள் அனுமதிக்க வேண்டும்” என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

Read More : BREAKING | இந்தியன் 2 படத்திற்கு தடை..? கமல்ஹாசன், இயக்குநர் சங்கருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு..!!

English Summary

Indian Railways has announced that the sleeping time of passengers in trains has been changed.

Chella

Next Post

'இந்தி தெரியாது போடா' என்பதில் கெத்து இல்லை.. பதிலாக இப்படி யோசியுங்கள்!! - இந்திய கிரிக்கெட் வீரர் சொன்ன விஷயம்

Fri Jun 28 , 2024
India cricketer Ravichandran Ashwin spoke on the language barrier issue which often leads to a North-South divide as well. Ashwin shared his views on the issue as he admitted that not knowing the language does pose a challenge to people from the South.

You May Like