fbpx

8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! ரூ.60,000 சம்பளத்தில் அட்டகாசமான வேலை..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக அலகுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் 18 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிட விவரங்கள் :

அலுவலக உதவியாளர் : 07

ஜீப் டிரைவர் : 06

பதிவு எழுத்தர் : 01

இரவு காவலாளி : 04

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் 8 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜீப் டிரைவர் 8-வது தேர்ச்சியுடன் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் இருக்க வேண்டும். பதிவு எழுத்தர் பதவிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம். இரவு காவலாளி பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

பொது / OC: 18 – 32 வயது

BC / MBC / DNC: 18 – 34 வயது

SC / SC(A) / ST: 18 – 37 வயது

சம்பள விவரம் :

அலுவலக உதவியாளர் : மாதம் ரூ.15,700 – 50,000 வரை

ஜீப் டிரைவர் : மாதம் ரூ.19,500 – 62,000/-

பதிவு எழுத்தர் : மாதம் ரூ.15,900 – 50,400/-

இரவு காவலாளி : மாதம் ரூ.15,700 – 50,000/-

விண்ணப்ப கட்டணம் : விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட முகவரிக்கு வரும் 6ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் வளர்ச்சி பிரிவு, முதல் தளம், ராமநாதபுரம் மாவட்டம் – 623 504

Chella

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது பட்டாசு வெடிக்க அதிரடி தடை..!! ரசிகர்கள் ஏமாற்றம்..!!

Wed Nov 1 , 2023
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது மும்பை, டெல்லியில் பட்டாசு வெடிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. காற்று மாசு காரணமாக இந்த இரு நகரங்களிலும் எஞ்சிய போட்டிகளின் போது வான வேடிக்கை நிகழ்த்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா – இலங்கை அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் (நவம்பர் 7), முதல் அரை இறுதி ஆட்டமும் (நவம்பர் 15) அங்கு […]

You May Like