fbpx

8ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும்..!! அறநிலையத்துறையில் உடனே வேலை..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள 281 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரங்கள்:

தட்டச்சர்6
நூலகர்1
கூர்க்கா2
அலுவலக உதவியாளர்65
உபகோவில் பல வேலை26
சமையல் உதவியாளர்2
ஆயா பணி3
பூஜை காவல்10
காவல்9
பாத்திர சுத்தி50

கல்வித்தகுதி: மேற்காணும் பணியிடங்களில், பெரும்பாலான பதவிகளுக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சியும், தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதும்

காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்து சமய அறநிலைத்துறை வெளியிட்ட தேர்வு அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள், அதனை பதிவிறக்கம் செய்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய தேதி 07.04.2023 பிற்பகல் 5.45 மணிக்குள்.

பொது நிபந்தனைகள்: தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

தனித்தனி விண்ணப்பம்: ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: அடிப்படை கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.

இணையதள முகவரி: விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in மற்றும் www.palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50/- விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, “இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம் -624 601” என்ற முகவரிக்கு நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

Chella

Next Post

தமிழ்நாட்டில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! எங்கு தெரியுமா..?

Sun Mar 5 , 2023
புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, அம்மாவட்ட ஆட்சியர் மா.செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து […]

You May Like