நீங்கள் பாஸ்போர்ட் பெற விரும்பினால், மத்திய அரசின் இந்த எச்சரிக்கையைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை தேடுபவர்கள் போலி இணையதளங்கள் அல்லது மொபைல் செயலிகளுக்கு இரையாக வேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. பல போலி இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் விண்ணப்பதாரர்களிடம் இருந்து தரவுகளை சேகரித்து பெரும் கட்டணம் வசூலிப்பது தெரியவந்துள்ளதால், அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி இணையதளங்களின் பெயர்கள்
www.indiapassport.org
www.online-passportindia.com
www.passportindiaportal.in
www.passport-india.in
www.passport-seva.in
www.applypassport.org
எனவே, இந்திய பாஸ்போர்ட் மற்றும் தொடர்புடைய சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் மோசடியான இணையதளங்களைப் பார்வையிடவோ அல்லது பாஸ்போர்ட் சேவைகள் தொடர்பாக பணம் செலுத்தவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் நிதி இழப்பை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாஸ்போர்ட் சேவைகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளம் www.passportindia.gov.in ஆகும்.