fbpx

”தேசப்பற்றையும், ராணுவத்தையும் அரசியலுக்காக இழுக்கக் கூடாது”..! – நிதியமைச்சர் பிடிஆர்

“நாகரிகம் உள்ள அரசியல்வாதிகள், தேசப்பற்றையோ, ராணுவத்தையோ அரசியல் கட்சிக்காக ஒருபுறம் இழுக்கவே கூடாது” என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரீஸ்வரர் கோயிலில் தமிழக அரசு சார்பில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”இந்தியாவை சுற்றியிருக்கின்ற பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவற்றைப் பார்த்தால், அந்த நாடுகளைவிட இந்தியாவின் ஜனநாயகம் கடந்த 75 ஆண்டுகளாக சக்திவாய்ந்த ஜனநாயகமாக இருந்துள்ளது. அதற்கு மூலக்காரணம், தேசப்பற்றையும் அரசியலையும் பிரித்து வைத்திருப்பது. ராணுவத்தையும், அரசியலையும் பிரித்து வைத்திருப்பது. இதுதான் இந்திய ஜனநாயகத்தின் 75 ஆண்டுகால வரலாறு.

”தேசப்பற்றையும், ராணுவத்தையும் அரசியலுக்காக இழுக்கக் கூடாது”..! - நிதியமைச்சர் பிடிஆர்

நாகரிகம் உள்ள அரசியல்வாதிகள், தேசப்பற்றையோ, ராணுவத்தையோ அரசியல் கட்சிக்காக ஒருபுறம் இழுக்கவே கூடாது. ஏற்கனவே ஒரு கட்சி, ஒரு மதத்தை அவர்களது சொத்து போல் இழுத்தது போன்று நாட்டையும், ராணுவத்தையும் அவர்களுடைய சொத்துபோல் இழுப்பது, நாட்டிற்கு நல்லது இல்லை” என்று அவர் கூறினார்.

Chella

Next Post

மருத்துவமனையில் விஜய்.. இணையத்தில் லீக்கான வாரிசு பட காட்சி... வைரல் வீடியோ

Mon Aug 15 , 2022
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.. மேலும் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரபு, ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், சங்கீதா கிரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.. பிரவீன் எடிட்டிங் செய்கிறார்.. கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் […]

You May Like