தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையாருக்கு நாட்டுச்சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்( 28) பிரிண்டிங் பிரஸ்ஸில் இவர் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுவிதா(22) இருவருக்கும் கடந்த மாதம் 25ஆம் தேதி திருமணம் நடந்தது இதனை தொடர்ந்து, சதீஷ் வீட்டில் தம்பதியினர் இருவரும் வசித்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில்தான் கடந்த 16ம் தேதி பணியிலிருந்த சதீஷை செல்போனில் தொடர்பு கொண்ட சுவிதா உடனடியாக வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார் ஆனால் சதீஷ் வேலையை விட்டுவிட்டு நினைத்த நேரத்தில் வர முடியாது என்று தெரிவித்து விட்டு தன்னுடைய பணியில் மூழ்கினார்.
இதனை தொடர்ந்து பிற்பகல் 3:45 மணி அளவில் சதீஷை whatsapp வீடியோ காலில் அழைத்த சுவிதா தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துவிட்டு வீடியோ அழைப்பை துண்டிக்காமலேயே தூக்கிட்டு கொண்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பதறிப் போன சதீஷ் உடனடியாக வீட்டிற்கு சென்று பார்த்த போது கயிற்றில் தொங்கிய நிலையில், இருந்த சுவிதாவை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுவிதா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.
இதனை தொடர்ந்து சோகமாகவே காணப்பட்டு வந்த சதீஷ், கடந்த 16ஆம் தேதி இரவு 8️ மணி அளவில் விஷமறிந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அவருடைய நண்பர்கள் அவரை மீட்டு பட்டுக்கோட்டைக்கு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் காலை மருத்துவமனையில் இருந்து சதீஷ் வெளியேறினார் அதன் பிறகு வீட்டுக்கு சென்று சேலையில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பட்டுக்கோட்டை தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் இலக்கியாகும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.