சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மக்கள், தங்களுக்கு தேவையான வசதிகளை பலரும், வெளியில் சென்று அழையாமல், வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக முடித்து விடுகின்றனர். அதனால், அரசு சார்பாக ஆங்காங்கே இணையதள சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி மக்கள் அரசு சார்ந்த வேலைகளை அலுவலகங்களுக்கு செல்லாமல் சுலபமாக முடித்து விடுகின்றனர். அந்தவகையில், தற்போது சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு https://tnurbanepay.tn.gov.in என்ற புதிய இணையதள சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தாம்பரம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி மற்றும் தொழில் வரிகளை மக்கள் சுலபமாக செலுத்தலாம். அனுமட்டுமின்றி, கட்டிட அனுமதி, பிறப்புச் சான்றிதழ், இறப்பு சான்றிதழ், காலி மனை, வரி பெயர் மாற்றம் உள்ளிட்ட பல சேவைகளை பெற இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.