fbpx

மின்சாரம் கூடுதலாக வழங்கினாலும் அபராதம் தான்!… ஏப்ரல் முதல் அமல்!… மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி!

முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதைவிட குறைவாகவோ, கூடுதலாகவோ மின்சாரம் வழங்கி இருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கலாம் என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் இயற்கையில் கிடைக்கிறது. ஆனால், இந்த இரு வகை மின்சாரமும் நாள் முழுதும் ஒரே சீராக கிடைக்காது. அதனால், மின் தேவையை பூர்த்தி செய்ய வசதியாக, அடுத்த நாள் எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதை காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்தவர்கள், முந்தைய நாளே மின் வாரியத்தின் துணை நிறுவனமான, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்திற்கு மையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

ஏனெனில், அதிகம் வழங்குவதாக தெரிவித்து குறைவாக வழங்கினால், வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க வேண்டிய நிலை உள்ளது. மின் வழித்தடங்களிலும் பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, முன்கூட்டியே தெரிவித்த அளவை விட, 15 சதவீதம் வரை வித்தியாசம் இருக்கலாம்; அதற்கு மேல் குறைவாகவோ, கூடுதலாகவோ மின்சார அளவு இருந்தால், யூனிட்டிற்கு அதிகபட்சம், 3 காசு வீதம், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கலாம் என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது. இது, ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

Kokila

Next Post

மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்?… தொடர் வன்முறை சம்பவங்களால் நடவடிக்கை!… முதல்வர் பிரேன்சிங் தகவல்!

Sun Feb 4 , 2024
தொட்ர்ந்து வன்முறை சம்பவங்கள் நீடித்துவருவதால் மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் மோதல் நடந்து வருகிறது. அப்பாவி மக்கள், ராணுவ வீரர்கள் என அவ்வபோது கொல்லப்படுகின்றனர். இந்த மோதல் போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் […]

You May Like