இத்தாலியில் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளின் போது ஆங்கிலத்தை பயன்படுத்தினால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.82 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இத்தாலிய பிரதமர் ஆலுக் கட்சி பாராளுமன்றத்தில் ஒரு வரைவு மசோதாவை முன்மொழிந்துள்ளார். அதன்படி, அரசு முறையான தகவல் பரிமாற்றத்தின் போது இத்தாலிய மொழிக்கு பதிலாக ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை பயன்படுத்துவோருக்கு 82,46,550 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வணிகம் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. நாட்டில் முதன்மை மொழியாக இத்தாலிய மொழி இருக்க வேண்டும். விதிகளை மீறினால் 4 லட்சம் முதல் 82 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.