fbpx

குப்பையை சாலையில் வீசினால் அபராதம்! தண்டனை!… நடைமுறை இன்றுமுதல் அமல்!… எங்கு தெரியுமா?

குப்பைகளை குப்பைதொட்டியில் போடாமல் தூக்கி எறிபவர்களுக்கு இன்றுமுதல் அபராதமும், தண்டனையும் விதிக்க சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கீழே இறங்கி வராமல் குப்பையை வீசுவது சட்டவிரோதம். அவ்வாறு, நாளை முதல் (ஜூலை 1) வீட்டிலிருந்தபடியே வீசப்படும் குப்பை, பொது இடத்தில் விழுந்தால் வீட்டின் உரிமையாளர் அல்லது வாடகைதாரர் குற்றம் புரிந்ததாகக் கருதி அபராதமும் தண்டனையும் விதிகப்பட உள்ளது. குப்பைகளை வீசி பொதுஇடத்தை அசுத்தம் செய்வதை தடுப்பது அவர்களின் பொறுப்பாகும் என்று சிங்கப்பூர் தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது. குப்பை வீட்டிலிருந்து தான் வீசப்பட்டது என்பதை சுற்றுப்புற பாதுகாப்பு அமைப்பு முதலில் உறுதி செய்யவேண்டும்.

குழந்தைகள், வயதானவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் குப்பை வீசினால் தேசியச் சுற்றுப்புற பாதுகாப்பு அமைப்பு இச்செய்கையை வேறு விதத்தில் கையாளும். அவர்களுக்கு விலக்கும் அளிக்கப்படும். வீட்டு உரிமையாளர் அல்லது வாடகைதாரர் குப்பை இவ்வாறு வீசப்பட்டபோது தாம் வீட்டில் இல்லை என்பதை நிரூபித்தால் சுற்றுப்புற பாதுகாப்பு அமைப்பு விதிக்கும் அபராதம் அல்லது தண்டனையை அவர் மறுக்கலாம். குப்பையை வீசியவரின் அடையாளத்தை சுற்றுப்புற அமைப்பிடம் 14 நாள்களுக்குள் தெரிவித்தும் அவர் தனது குற்றச்சாட்டை மறுக்கலாம்.

அவ்வாறு உயரத்திலிருந்து குப்பை வீசுபவர் யார் என்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு முதல் முறை: $2,000(இந்திய கணக்குப்படி 1,64,080 ரூபாய்) வரையும், 2வது முறை: $4,000 (இந்திய கணக்குப்படி 3,28,385 ரூபாய்) வரையும், 3வது அல்லது அடுத்தடுத்த முறை: $10,000 (இந்திய கணக்குப்படி 8,20,962.50 ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்படும். அதோடு, குற்றம் புரிந்தோருக்கு 12 மணி நேரம் வரை பொதுஇடத்தை சுத்தம் செய்யும் பணியும் தண்டனையாக விதிக்கப்படும் என சிங்கப்பூர் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

Kokila

Next Post

ஆதார் அடிப்படையிலானமுக அங்கீகார  பரிவர்த்தனை 10.6 மில்லியனாக உயர்வு...! மத்திய அரசு தகவல்...!

Sat Jul 1 , 2023
2021 அக்டோபரில் தொடங்கப்பட்டதிலிருந்து, சேவை வழங்கலுக்கான ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார  பரிவர்த்தனைகள், மே மாதத்தில் 10.6 மில்லியனாக உயர்ந்துள்ளது. 10 மில்லியனுக்கும் அதிகமான முக  அங்கீகாரப் பரிவர்த்தனைகளைப் பதிவுசெய்வது இது தொடர்ந்து இரண்டாவது மாதமாகும். முக அங்கீகரிப்பு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மேல்நோக்கி சென்றவண்ணம் உள்ளது. மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 38 சதவீதம் அதிகமாகும். இந்திய தனித்துவ அடையாள  ஆணையத்தால், உள்நாட்டில்  உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு, எம்எல்  அடிப்படையிலான முக  அங்கீகார தீர்வு, இப்போது மாநில அரசு துறைகள், மத்திய அரசில்  உள்ள அமைச்சகங்கள் மற்றும் சில வங்கிகள் உட்பட 47நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிது.  ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளைப் பதிவு செய்ய இது பயன்படுத்தப்படுகிறது;  பிரதமரின் கிசான் திட்டத்தில் பயனாளிகளை அங்கீகரிப்பதற்காகவும், ஓய்வூதியதாரர்கள் வீட்டிலேயே டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை உருவாக்குவதற்காகவும். பல அரசுத் துறைகளில் ஊழியர்களின் வருகையைக் குறிக்கவும், சில முன்னணி வங்கிகளில் தங்கள் வணிக நிருபர்கள் மூலம் வங்கிக் கணக்குகளைத் தொடங்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.

You May Like