fbpx

தமிழக அரசுக்கு அபராதம் விதிப்பு … என்ன காரணம் ?

ஓய்வூதியம் தொடர்பான வழக்கில் நேரத்தை தமிழக அரசு வீணக்கின்றது என கூறி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

போக்குவரத்து துறையில் பணியாற்றியவர் வேணுகோபால்.இவர் கடந்த 1995ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில் பல்வேறு காரணங்களைக் காட்டி ஓய்வூதியத்தை அவருக்கு போக்குவரத்து துறை வழங்கவில்லை. இதனால் தொழிலாளர் ஆணையத்தில் முறையிட தொடங்கி , உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டு அந்த உரிமையை பெற்றார். ஆனால் கடந்த 2009ம் ஆண்டு ஓய்வூதிய நிலுவைத் தொகையை போக்குவரத்து துறை தரவில்லை.

2019ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வேணுகோபால் வழக்கு தொடர்ந்தார். கடந்த பிப்ரவரி மாதம் நிலுவைத் தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது 75 வயதான வேணுகோபாலுககு உரிய தொகையை தரவில்லை . அதே சமயம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழக அரசு. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர் . ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தியது.

வழக்கு விசாரணையின் போது , ஏற்கனவே இந்த வழக்கில் ஓய்வூதிய உரிமை தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பித்த நிலையில் அவர் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர் என தமிழக அரசு வாதிடுவது தவறானது. தேவையில்லாத விஷயங்களில் தமிழக அரசு வழக்கு போட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணக்கின்றது. எனவே 5 லட்சம் அபராம் விதிக்கப்படுகின்றது. ’ என உத்தரவிட்டனர்.

Next Post

கேரளாவில் பொது சொத்துக்களை சேதப்படுத்திய பி.எப்.ஐ; ரூ.5.20 கோடி டெபாசிட் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

Thu Sep 29 , 2022
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் இடங்களில் நாடு முழுவதும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதை கண்டித்து கடந்த 23-ஆம் தேதி கேரளாவில் அந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. போராட்டத்தின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தப்பட்டது. மாநிலத்தில் முழு அடைப்புக்கு தடை விதித்து இருந்த நிலையில், இந்த போராட்டத்தை வழக்காக பதிவு செய்து உயர் […]

You May Like