வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. சுமார் 6 கோடி வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. எனினும் உங்கள் வருமான வரிக் கணக்கைச் சரிபார்க்கத் தவறினால், தாமதமாகத் தாக்கல் செய்தால் ₹5,000 அபராதம் விதிக்கப்படலாம். வருமான வரித்துறை கொடுத்த காலக்கெடுவிற்குள் உங்கள் ஐடிஆரைத் தாக்கல் செய்தும் அதைச் சரிபார்க்கத் தவறினால், ரிட்டர்ன் நிராகரிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

வருமான வரித்துறை அதன் இணையதளத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சரிபார்க்கப்படாமல் இருந்தால். அந்த வருமான வரி அறிக்கை செல்லாததாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விண்ணப்பதாரர் தகுந்த காரணத்தைக் கூறி சரிபார்ப்பதில் தாமதம் ஏற்பட்டால் மன்னிப்புக் கோரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
உங்கள் மன்னிப்புக் கோரிக்கை வருமான வரி அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், உங்கள் வருமான வரி அறிக்கையை ஆன்லைனில் சரிபார்க்கலாம்.. அதாவது ஜூலை 31 க்குப் பிறகு நீங்கள் வருமான வரி அறிக்கையை சரிபார்க்க எடுத்துக்கொள்ளப்பட்ட நேரத்தை வைத்து உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.. எனவே உங்கள் வருமானம் சரிபார்க்கப்படவில்லை என்பதை நீங்கள் கவனித்தவுடன், மன்னிப்புக் கோரிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும்.
மத்திய நேரடி வரி வாரியம், வருமான வரி அறிக்கையை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கான கால வரம்பை 120 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் குறைத்துள்ளது, அதாவது வரி செலுத்துவோர் வருமான வரிக் கணக்கை மின் சரிபார்த்த தேதியை வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான தேதியாகக் கருதப்படும் என்று தெரிவித்துள்ளது..