இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அண்மையில் ராஜஸ்தான், பீகார், ஹரியானா மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநில அரசுகள் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டன. இதனால், அரசு ஊழியர்களின் சம்பளமும் வெகுவாக உயர்ந்தது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில அரசு தனது ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியத் தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 35 ஆயிரம் ரூபாயில் இருந்து 58 ஆயிரத்து 300 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே ரயில்வே அல்லது விமான பயணத்திற்கு தற்போதுள்ள உதவித்தொகை 8 லட்சத்தில் இருந்து ஆண்டுக்கு 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய தொகை உயர்வால் அரசுக்கு ஒரு ஆண்டில் 6.80 கோடி நிதிச் சுமை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.