fbpx

Pension Schemes | மக்களே..!! இந்த ஓய்வூதியத் திட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? எவ்வளவு நன்மைகள் பாருங்க..!!

இந்தியாவின் வசிக்கும் குடிமக்கள் பயன்பெறும் வகையில், மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. மக்கள் தங்களின் ஓய்வு காலத்தில் நிதியுதவி பெறுவதற்காக மத்திய அரசு பல ஓய்வூதியத் திட்டங்களை (Pension Schemes) அமல்படுத்தியிருக்கிறது. அதில், அடல் ஓய்வூதியத் திட்டம், தேசிய ஓய்வூதிய அமைப்பு, தேசிய சமூக உதவி திட்டம் மற்றும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் ஆகியவை அடங்கும்.

அடல் ஓய்வூதிய திட்டமானது கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் தங்களின் பணத்தை டெபாசிட் செய்ய முடியும். 60 ஆண்டுகள் முடிந்த பிறகு உங்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் 18 வயது முதல் 20 வயது வரை உள்ள இந்திய குடிமகன்கள் சேரலாம். 60 வயது முடிவடைந்த பிறகு அவர்களுக்கான மொத்த தொகை அல்லது மாத ஓய்வூதியம் வழங்கப்படும்.

தேசிய சமூக உதவி திட்டமானது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக தொடங்கப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தில் மாதம் ரூ.200 முதல் ரூ.500 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும். ஒருவேளை இந்த திட்டத்தில் சேர்ந்த நபர் இறந்துவிட்டால், குடும்பத்திற்கு 20,000 வழங்கப்படும்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டமானது 70 வயது முதல் 79 வயது வரையிலான பிபிஎல் பிரிவை சேர்ந்த மூத்த குடிமக்களுக்காக தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 200 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.

Chella

Next Post

அரசு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ள முடியவில்லையா….? இனி கவலையே வேண்டாம் மாநில அரசு கொண்டு வந்த அசத்தல் திட்டம்….!

Thu Aug 24 , 2023
பொதுமக்கள் தங்களுடைய குறைகளை இனி அரசுக்கு கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து, அதன் மூலமாக தெரியப்படுத்துவதற்கான வசதியை தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதாவது, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும், பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் அது பற்றி, அதிகாரிகளிடமோ அல்லது அரசியல்வாதிகளிடமோ சாதாரண மக்களால் நேரடியாக கூற முடியாத சூழ்நிலை இருக்கிறது. இதற்கு தீர்வு காணும் விதமாகவே, இந்த திட்டம் தற்போது கொண்டுவரப்பட்டிருப்பதாக தெரிகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு […]

You May Like