fbpx

ஆகஸ்ட் 23-ம் தேதி ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் முகாம்…!

சென்னையில் உள்ள தமிழ்நாடு சரக தகவல் தொடர்பு கணக்குகளின் முதன்மைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தால் தொலைத்தொடர்புத் துறை தமிழ்நாடு வட்டம் மற்றும் பிஎஸ்என்எல், தமிழ்நாடு வட்டத்தின் கீழ் உள்ள திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் எஸ்எஸ்ஏ-க்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதற்காக 2024, ஆகஸ்ட் 23 அன்று ‘ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம்’ தஞ்சாவூரில் நடத்தப்பட உள்ளது.

நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்குகள், கொள்கைகள் தொடர்பான வழக்குகள் ஆகியவை இந்த ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் வரம்புக்குள் வராது. போதுமான விவரங்கள் இல்லாத நேர்வுகளும், குறைதீர்ப்புக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. அறிவிக்கையும், இதர விவரங்களும் “www.cgca.gov.in/ccatn” என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த முகாமின் போது, வாழ்நாள் சான்றிதழ், உங்கள் ஓய்வூதியதாரரை அறியுங்கள் படிவம் ஆகியவை சேகரிக்கப்படும். இவற்றை முகாமின்போது ஓய்வூதியதாரர்கள் சமர்ப்பிக்கலாம். இடம்: கருத்தரங்க கூடம், தேசிய உணவு தொழில் நுட்பம், தொழில் முனைவு, நிர்வாக கல்விக்கழகம், புதுக்கோட்டை சாலை, பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர் 613 005. நேரம்: காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Pensioners Grievance Camp on 23rd August

Vignesh

Next Post

மூத்த குடிமக்களுக்கு உதவும் சூப்பரான திட்டம்.. கடைசி காலத்தில் பிரச்சினையே இல்லை!!

Fri Aug 2 , 2024
Post Office Scheme: Senior Citizen Savings Scheme offers good interest, only those above 60 years of age can invest..

You May Like