ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சாயப்பட்டறை, தோல் பதனிடும் தெழிற்சாலைகள், ரப்பர் தொழில் அதிகம் உள்ள மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9,566 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் இதுவரை 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் தொடக்க நிலை பாதிப்புகள் உள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களை மிக எளிதாக மருத்துவ சிகிச்சைகள் முறைகள் மூலம் காப்பாற்றிட முடியும் என்று அவர் கூறினார்.
Readmore: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! உங்கள் பள்ளிகளில் இன்று Aadhaar முகாம்..!!