fbpx

மக்களே அலெர்ட்..!! தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியது..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 2022 நவம்பர் மாதத்துக்குப் பின்னர் 129 நாட்கள் கழித்து, தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில், ஆயிரத்து 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 249, குஜராத் 179, கேரளா 163, கர்நாடகா 121, தமிழகம் 64, டில்லியில் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலா ஒருவர் என 3 பேர் நேற்று 915 ஆக அதிகரித்தது.

மொத்த தொற்று பலி 5 லட்சத்து 30 ஆயிரத்து 802 ஆக உயர்ந்தது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 526 உயர்ந்து, 5 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் 7 ஆயிரத்து 160 பேருக்கு நேற்று முன்தினம் தடுப்பூசி டோஸ் போடப்பட்டது. இதுவரை கோடிக்கணக்கான டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

Chella

Next Post

சூப்பர் குட் நியூஸ்..!! பத்திரப்பதிவு கட்டணம் அதிரடி குறைப்பு..!! சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அறிவிப்பு..!!

Mon Mar 20 , 2023
நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பத்திரப்பதிவுக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 2023-24ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் மேம்பாட்டுத்துறை, சுற்றுச்சூழல் மேம்பாடு என பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. பட்ஜெட் உரை வாசித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பதிவுத்துறை கட்டணம் 4 சதவிகிதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவித்தார். […]

You May Like