fbpx

மக்களே அலர்ட்..!! இந்த மாவட்டத்தில் உறைபனி..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

அதேபோல் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட நிலவக்கூடும் என்றும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 22ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Chella

Next Post

ராமர் கோயில் பிரதிஷ்டை விழா..!! இந்தியா முழுவதும் ரூ.500 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை..!!

Sun Jan 21 , 2024
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், நடிகர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை திறந்து வைக்க உள்ளார். […]

You May Like