fbpx

மக்களே அலெர்ட்..!! இந்த 12 மாவட்டங்களை புரட்டி எடுக்கப்போகும் கனமழை..!!

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் (நவ.1, 2) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நவம்பர் 3 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

குரூப் 2 தேர்வு முடிவுகள்..!! மேலும் தாமதமாகிறதா..? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு..!!

Tue Oct 31 , 2023
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள், 8 மாதங்களைக் கடந்தும் வெளியாகாததால் தேர்வர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற்றது. இதில், 55,071 பேர் பங்கேற்ற நிலையில், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால், பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தேர்வர்கள் கூறுகின்றனர். டிஎன்பிஎஸ்சி-க்கு தலைவர் நியமிக்கப்படாததே ஆணையத்தின் பணிகளில் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதே பயிற்சி மைய […]

You May Like