fbpx

மக்களே அலெர்ட்..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன தேதி இன்னைக்கு தான்..!! பெருசா சம்பவம் இருக்கு..!!

இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளிலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30ஆம் தேதி வரை சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளது கடலுக்கு சென்ற மீனவர்கள் 28ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார்..!! அவரது மகள் யாரென்று இன்று தெரியும்..!! வெளியான பகீர் தகவல்..

Mon Nov 27 , 2023
பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவரின் மகள் இன்று நவ.27ஆம் தேதி வெளியே வருவார் எனக்கூறி புயலைக் கிளப்பியுள்ளார் இயக்குநர் கெளதமன். இறுதிகட்ட ஈழப்போரில், 2009 மே 17ஆம் தேதி, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் உயிரோடு, நலமுடன் இருக்கிறார். இதை அவரின் குடும்பத்தினர் அனுமதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என 2023 பிப்ரவரி மாதமே பேசி சர்ச்சையைத் கிளப்பியிருந்தார்உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன். […]

You May Like