fbpx

Tour போக ரெடியா மக்களே!… அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!… சுற்றுலாப் பேருந்துகளில் முன்பதிவு செய்துகொள்ளலாம்!

Tour: கோடைக்காலங்களில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள், சுற்றுலா பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

கோடைக்காலங்களில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள், சுற்றுலா பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற சுற்றுலாத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் வருகை தருவார்கள். அந்தவகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் உதகை, கொடைக்கானல் ஆகிய மலை வழித்தடங்களில் சுற்றுலா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், சுற்றுலா செல்ல விரும்பும் விரும்பும் பொதுமக்கள், சுற்றுலா பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும், சுற்றுலா தளங்களில் உள்ள அரசு விடுதிகளில் தங்கும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவற்றை பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறிய அமைச்சர், பொதுமக்களுக்கான முன்னேற்பாடுகளை சம்பந்தபட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Readmore: சுட்டெரிக்கும் வெயில்!… இதுவரை இல்லாத அளவுக்கு உச்சமடைந்த மின் நுகர்வு!… 40 கோடி யூனிட்டை தாண்டியது!

Kokila

Next Post

அடுத்த Twist: 2024 தேர்தலில் இந்திய குடியரசு கட்சி அதிமுகவிற்கு ஆதரவு...!

Sat Mar 9 , 2024
இந்திய குடியரசு கட்சி அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இந்திய குடியரசு கட்சி அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகளில் 1 தொகுதி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசு தெரிவித்துள்ளார். கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. தற்போது […]

You May Like