fbpx

மக்களே 5 நாட்களுக்கு உஷாரா இருங்க..! – வெப்ப அலை தாக்க போகுதாம்..!

அடுத்த ஐந்து நாட்களுக்கு வட தமிழக உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருந்தது. கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை 9 இடங்களில் 40.0° செல்சியஸ்க்கு மேல் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.0° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.6° செல்சியஸ், சேலத்தில் 41.5° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.0° செல்சியஸ், தர்மபுரியில் 41.0° செல்சியஸ், திருத்தணியில் 40.4°, வேலூரில் 40.3°, திருச்சியில் 40.1° செல்சியஸ் மற்றும் நாமக்கல்லில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° – 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° – 38° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22° -31° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 36.7° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 27.04.2024 முதல் 01.05.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.02.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 03.05.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 27.04.2024 முதல் 01.05.2024 வரை: தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39°-42° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-39° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: 27.04.2024 முதல் 01.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: 27.04.2024 முதல் 01.05.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Read More: Amit Shah | “இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்…” உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சை பேச்சு.!!

Rupa

Next Post

திருமண உடையை கருப்பாக மாற்றிய சமந்தா.. காரணம் என்ன தெரியுமா? வெளியான வீடியோ

Sun Apr 28 , 2024
நடிகை சமந்தா, தனது திருமணத்தின்போது அணிந்திருந்த வெள்ளை நிற கவுனை, கருப்பு நிறத்தில் மாற்றியமைத்துள்ளார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக இருந்தனர். தெலுங்கு திரைப்படங்களில் இணைந்து நடித்த இருவரும் காதல் வயப்பட்டதால், கடந்த 2017-ம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர், கடந்த 2021ம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து […]

You May Like